விசாலமான சந்தை தவிர, வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, சீனாவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பை நிறுவி நடத்தும் செலவு குறைவு. மேலும் சீனாவின் அறிவியல் ஆய்வு நிலை வளர்ச்சி அடைந்த நாடுகளை காட்டிலும் தாழ்வாக இல்லை. பல பன்னாட்டு நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புகளை சீனாவில் அமைத்ததற்கு இது காரணமாகும்.
உள்ளார்ந்த சந்தை மற்றும் வளமிக்க அறிவியல் ஆய்வு வளத்தை தவிர, பன்னாட்டு நிறுவனங்களுக்கு சீனா வழங்கும் சலுகைகளால், சீனாவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொழிலில் அவை ஈடுபடும் நம்பிக்கை மேலும் வலுப்படுகிறது. சீன வெளிநாட்டு பொருளாதார வர்த்தக பல்கலைக்கழகத்தில் பணி புரியும் பேராசிரியர் சாங் பாய் சுவான் செய்தியாளரிடம் கூறியதாவது—
"பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புகளை நிறுவுவதற்கு, சீனாவின் கொள்கை ஆக்கப்பூர்வமாக ஊக்கமளிக்கிறது. உரிய வசதிகளையும் சீனா வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, நில பயன்பாட்டுக்கு சலுகை, குறைவான வருமான வரி முதலியவை இந்த வசதிகளில் அடங்கும்." என்றார் அவர்.
சீனாவில் நல்ல ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சூழ்நிலையினால், சீனாவில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருகிறது. 1998ஆம் ஆண்டு, Microsoft நிறுவனம் 8 கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்து சீனாவில் தனது ஆய்வகத்தை துவக்கியது. 2004ஆம் ஆண்டு வரை, சீனாவில் அதன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புகளின் எண்ணிக்கை 5 எட்டியுள்ளது. 200 கோடி அமெரிக்க டாலர் முதலீடு இவற்றில் செய்யப்பட்டுள்ளது.
உலகில் புகழ்பெற்ற Motorola நிறுவனம் சீனாவில் 18 ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையங்களை நிறுவி, 15 கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்துள்ளது. 1 2
|