• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-10 13:19:10    
சீன பொருளாதாரம் பற்றி மெக்சிகோவின் நாணய ஏடு வெளியிட்ட கட்டுரை

cri

சீனாவின் பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிக்கை உலகை வியப்படைக்க செய்துள்ளது. 2004ஆம் ஆண்டில் சீனப் பொருளாதாரம் மந்தமாக அதிகரிக்கும் என்று மக்கள் கருதியிருந்தனர். ஆனால் உண்மையில் அதன் பொருளாதார அதிகரிப்பு விகிதம் 9.5 விழுக்காடாக இருந்தது. 1996ஆம் ஆண்டுக்கு பின், மிக உயர் அதிகரிப்பு விகிதம் இதுவாகும். கடந்த 25 ஆண்டுகளில் சீனப் பொருளாதாரம் சராசரியாக ஆண்டுக்கு 8 விழுக்காடு அதிகரித்துள்ளது.

முன்பு, சீனாவின் பொருளாதார அளவு சற்று சிறிதாக தான் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, தொடர்ச்சியாக அதிகரிப்பதால், தற்போது உலகில் ஆற்றல்மிக்க, துடிப்புமிக்க நாடுகளில் ஒன்றாக சீனா மாறியுள்ளது.

சீனாவின் வணிகப் பொருள் ஏற்றுமதி உலகில் நான்காம் இடமும் இறக்குமதி உலகில் மூன்றாம் இடமும் வகிக்கின்றது. சீனா மிக அதிக மென்ரக தொழிற்துறை உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. இந்த பொருட்களில் பொம்மைகள், சைகிள், ஆடை ஆகியவை தவிர, செல் பொன் உள்ளிட்ட உயர் அறிவியல் தொழில்நுட்ப பொருட்களும் அடங்கும். சர்வதேச விற்பனையிலும் சரி, கொள்வனவிலும் சரி சீனா மிக பெரும் பங்கு வகிக்கின்றது.

இன்று சீனாவின் பொருளாதார அளவும் அதிகரிப்பும், உலக பொருளாதாரத்துக்கு பெரும் செல்வாக்கை ஏற்படுத்துகின்றது. ஜப்பான் மற்றும் ஜெர்மனியின் பொருளாதார அளவு சீனாவை விட மேலும் பெரிதாக இருந்த போதிலும், அவை சீராக வளர்வதா இல்லை என்பது உலக பொருளாதார ஒழுங்கிற்கு அதிக செல்வாக்கை ஏற்படுத்தாது. ஆனால் சீனாவின் பொருளாதாரத்தின் நிலைமை சர்வதேச பொருளாதாரத்துக்கு சாதகமான அல்லது பாதகமான செல்வாக்கை ஏற்படுத்தும் என்று கட்டுரை கூறுகின்றது.

1  2