• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-10 13:19:10    
சீன பொருளாதாரம் பற்றி மெக்சிகோவின் நாணய ஏடு வெளியிட்ட கட்டுரை

cri

இதற்கு காரணம் என்ன என்றால், சீனாவின் பொருளாதாரம் விரைவாக வளரும் இளம் கட்டத்தில் உள்ளது. ஆனால் ஜப்பான் மற்றும் ஜெர்மனியின் பொருளாதாரம் பக்குவடைந்துள்ளது. அவற்றின் நுகர்வு நிலை ஏற்கனவே உயரமாக உள்ளது. மேலும் வேகமாக அதிகரிக்க இயலாது. அமெரிக்காவின் பொருளாதாரத்தை மக்கள் மதிப்பிடும் போது, அதன் அதிகரிப்பு வாய்ப்பு ஆண்டுதோறும் 3 முதல் 4 விழுக்காடு மட்டுமே என்று கருதுகின்றனர். 5 விழுக்காடு அதிகரிக்கும் என யாரும் கருத மாட்டார்கள் என்று கட்டுரை குறிப்பிடுகின்றது.

இதற்கு மாறாக, 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட சீனாவின் தற்போதைய நபர்வாரி தேசிய உற்பத்தி மதிப்பு 1000 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. அதன் எதிர்கால பொருளாதார அதிகரிப்பு வாய்ப்பு எல்லயற்றது. தற்போது சீனாவில் இந்த பிந்தங்கிய நாட்டை வலுவான தொழிற்துறை மற்றும் வணிக நாடாக மாற்றுவதற்கான தலைசிறந்த தலைவர்கள் உள்ளனர். சுமார் 4 கோடி மக்களின் நுகர்வு நிலை மிக உயரமானது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் அவர்கள் சுமார் 3 விழுக்காடு வகிக்கின்றனர். இந்த தொகை விரைவில் பத்து கோடியாக உயரும். சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்புக்கான உள்ளார்ந்த ஆற்றல் மிக பெரியது, சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு வியக்கத்தக்கது. 2003ஆம் ஆண்டின் அதன் அதிகரிப்பு விகிதம் 9.3 விழுக்காடாக இருந்தது. 2004ஆம் ஆண்டு பொருளாதார அதிகரிப்பு விகிதம் 9.5 விழுக்காடாக உயர்ந்தது.. 2003ஆம் ஆண்டு சீனாவின் முதலீடு 26.7 விழுக்காடு அதிகரித்தது. 2004ஆம் ஆண்டு முதலீடு 25.8 விழுக்காடு அதிகரித்தது. 2003ஆம் ஆண்டு சீனாவின் தொழிற்துறை உற்பத்தி மதிப்பு 17 விழுக்காடு அதிகரித்தது. சீனா ஏற்றுக்கொண்டு வெளிநாடுகளின் நேரடி முதலீட்டு தொகை உலகில் அனைத்து நாடுகளையும் தாண்டி 6000 கோடி அமெரிக்க டாலரை எட்டியது என்று கட்டுரை கூறுகின்றது.

2020 ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 4 லட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்டும், அப்போது நபர்வாரி GDP 3000 அமெரிக்க டாலரை எட்டும் என்று டாவோஸ் உலக பொருளாதார கருத்தரங்கில் சீனத் துணைத் தலைமை அமைச்சர் ஹுவாங் ச்சு அறிவித்தார். அடுத்த பத்து ஆண்டுகளில் சீனா முழு மூச்சுடன் ஓரளவு வசதி படைத்த சமூகத்தை நிர்மாணிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு உலகில் 6ஆம் இடம்வகிக்கும் சீனா அப்பொது, அமெரிக்கா, ஜப்பான் ஆகியவற்றை அடுத்து மூன்றாம் இடம்வகிக்கும் என்று முன்கூட்டியே மதிப்பிடலாம் என இக்கட்டுரை இறுதியில் கூறுகின்றது.


1  2