• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-23 16:00:06    
அன்சான் நகரின் கோயில்கள்

cri

மலைகளின் வடிவம், ஆயிரம் தாமரைப் பூக்கள் மலர்வது போல இருப்பதால், ஆயிரம் தாமரை பூ மலை எனவும் அழைக்கப்படுகின்றது. ஆண்டு தோறும் ஜுன் திங்கள் துவக்கத்தில் சியென்சான் மலையில் மாபெரும் புத்த மத விழா நடைபெறுகின்றது. துறவிகளும் பெண் துறவிகளும் அதிக அளவில் வருகை தந்து, புத்த நடவடிக்கையில் ஈடுபட்டு, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்கின்றனர்.

அன்சான் நகரிலுள்ள jade ஆல் ஆன புத்தர் தோட்டம் 1996ஆம் ஆண்டு, பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டது.

இத்தோட்டத்தில் அமைந்துள்ள புத்தர் சிலை, சுமார் 260 டன் எடையுடைய jade ஒன்றால் செதுக்கப்பட்டது.

Jade உற்பத்தியில் புகழ்பெற்ற வட கிழக்கு சீனாவின் யூசியெ மாவட்டத்தில், 1960ல், அது கண்டுபிடிக்கப்பட்டது. jade மன்னர் என அது பெயர் பெற்றது. இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய Jadeஇல், புத்தர் சில செதுக்குவதென உள்ளூர் அரசு 1994ஆம் ஆண்டு முடிவு மேற்கொண்டது.

இந்த புத்தர் தோட்டத்தின் முன் வாசலில், பதாகையொன்று தொங்கவிடப்பட்டுள்ளது. இப்புத்தர் சிலை, கின்னஸ் சாதனை நூலில் இடம்பெற விண்ணப்பிக்கப்பட்டுல்ளதாக அதில் எழுதப்பட்டுள்ளது.

இந்த புத்தர் தோட்டம், பயணிகளுக்குத் திறந்துவைக்கப்பட்ட பின், அன்சான் நகரில் புதிய சுறஅறுலா தலமொன்று, அதிகரித்துள்ளது. அன்சான் சுற்றுலா பயணப் பணியகத்தின் தலைவர் தியென்சன்சு, இது பற்றி குறிப்பிடுகையில், மத கோயில்களில் பயணம் மேற்கொள்வது என்பது, அன்சான் சுற்றுலா துறையின் முக்கியமான பகுதியாக மாறியுள்ளது என்று சுட்டிக்காட்டினார். தற்போது, அந்சான் நகரின் சுற்றுலாத்துறை, வளர்ச்சியடையத் துவங்கியது. அதன் வளர்ச்சிப் போக்கு சிறந்து காமப்படுகின்றது. 1999ஆம் ஆண்டில் 24000 வெளிநாட்டுப் பயணிகளும் 38 லட்சம் உள்நாட்டுப் பயணிகளும் இந்நகருக்கு வருகை தந்தனர். சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமான அதிகரிப்பு விகிதம், 20 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.


1  2