• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-27 17:11:19    
சீன-இந்திய பொருளாதாரம்—ஒரு ஒப்பீடு

cri

இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட்டுப் பார்ப்பது இப்போது பரபரப்பான ஒரு விஷயமாக ஆகியுள்ளது. ஒரே மாதிரியான வரலாற்றுப் பின்னணி உடைய, உலகின் இரண்டு மாபெரும் வளரும் நாடுகளான இந்தியாவும் சீனாவும் பல பொதுவான சவால்களை எதிர்நோக்கியுள்ளன. இவற்றைச் சமாளிப்பதற்காக, ஒரே மாதிரியான முறைகளையும், வேறுபட்ட முறைகளையும் பின்பற்றுகின்றன.

இத்தகைய ஒரே மாதிரியான அல்லது வேறுபட்ட அணுகுமுறைகள் தான் இந்த ஒப்புநோக்கு ஆய்வுக்கு வழிகாட்டியுள்ளன. இந்த ஒப்புநோக்கு மூலம் ஒரு நாடு இன்னொன்றிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.

சீனா சந்தைத் திறப்புக் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கியதிலிருந்து கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக, வேகமான பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து பராமரித்து வந்திருப்பதோடு, தனது மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பெரிதும் மேம்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 1990ஆம் ஆண்டுகளில் 6 விழுக்காட்டை எட்டியது. முந்தைய 40 ஆண்டுகளில் பொதுவாகக் காணப்பட்ட 3 விழுக்காடு என்ற இந்தியப் பொருளாதார வளர்ச்சி வேகம் இருமடங்காக உயர்ந்தது. 2003—2004ஆம் ஆண்டில் இந்தப் பொருளாதார வளர்ச்சி 8.3 விழுக்காடு என்ற அளவைக் கூடத் தொட்டுவிட்டது. அது உலகப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி தொழில் மயமாக்கம் என்னும் பாரம்பரிய வளர்ச்சி முறையைப் பின்பற்றுவதாக இருந்தது. சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் பொருள் தயாரிப்பு 54 விழுக்காடாக உள்ளது. சீனத் தயாரிப்புப் பொருட்கள் பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதற்கு மாறாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொருள் தயாரிப்பு தற்போது 25 விழுக்காடாக மட்டுமே உள்ளது. பாதி இந்தியப் பொருளாதாரத்திற்கு பக்கபலமாக இருப்பது சேவைத் தொழில் துறை என்று சொல்லலாம். இந்த இரண்டு வளர்ச்சி முறைகளினால் ஏற்படும் சாதக பாதகங்கள் யாவை? இந்த இரண்டு வளர்ச்சி முறைகளிலே எது நீடித்து நிலைத்து நிற்கும்? இந்தக் கேள்விகளுக்கு பொருளாதார அறிஞர்களும் சுற்றுச்சூழல் நிபுணர்களும் விடை அளித்தாக வேண்டும் ஏனென்றால், இந்த இரண்டு வளர்ச்சி முறைகளில் எதைத் தெரிவு செய்கிறோம் என்பதைப் பொறுத்தே 230 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் அமையும்.

1  2