• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-27 17:11:19    
சீன-இந்திய பொருளாதாரம்—ஒரு ஒப்பீடு

cri

சீனாவிலும் இந்தியாவிலும் உள்ள வேறுபட்ட அரசியல் அமைப்பு முறைகள் தத்தமது பொருளாதாரப் போக்கில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதும் அறிஞர்களுக்கு அக்கறை உடைய ஒரு கேள்வியாகும்.

இது மட்டுமல்ல, நகரமயமாக்கம் என்றொரு பிரச்சினையும் உள்ளது. சீனாவிலும் இந்தியாவிலும் கிராம மக்கள் தொகை மிகமிக அதிகம். எதிர்வரும் பத்தாண்டுகளில், கிராமப்புற மக்கள் நகரங்களுக்குப் பெருமளவில் குடிபெயர்வதால், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் பொருளாதாரம், அரசியல், சமுதாயம், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் சவால்கள் ஏற்படும்.

இந்த பரந்தளவிலான ஒப்பீட்டுடன் கூடவே, இருநாட்டுப் பொருளாதாரங்களின் நுணுக்கமான அம்சங்களையும் ஒப்பிட்டு ஆராயலாம். இந்தியாவின் தனியார் துறை பெருளாதாரம் முன்பே நன்கு வளர்ச்சி பெற்று, இப்போது முதிர்ந்த நிலையில் இருக்கிறது. இந்தியாவும் சீனாவும் ஒரே வளர்ச்சி நிலையில் இருப்பதால், இந்தியத் தொழில் நிறுவனங்களின் வெற்றிகரமான அனுபவங்கள் பின்பற்றத்தக்க ஒரு நல்ல முன்மாதிரியாகும்.

சர்வதேச மூலதனத்தின் கோரிக்கைகளுக்காகவும் இந்திய-சீனப் பொருளாதாரங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. அதிக லாபம் ஈட்டுவதே சர்வதேச மூலதன முதலீடுகளின் நோக்கம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

சீனாவைத் தொடர்ந்து இந்தியாவும் உலகப் பொருளாதாரத்தின் அடுத்த மையமாகத் திகழுமா? இந்தக் கேள்வியை உலக முதலீட்டாளர்கள் கேட்கின்றனர்.

சீனப் பொருளாதாரத்தின் மீது சில முதலீட்டாளர்கள் ஆரம்பத்தில் அவ்வளவாக நம்பிக்கை கொள்ளாத போதிலும், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சீனப் பொருளாதாரம் தனது வேகமான வளர்ச்சியை தொடர்ந்து நிலைநிறுத்தி வந்துள்ளது. இதனால், ஆரம்பத்தில் அவநம்பிக்கை கொண்டிருந்தவர்கள் சீனச் சந்தைக்குள் நுழையும் ஒரு நல்ல வாய்ப்பை இழந்து விட்டோமே என்று வருத்தப்பட வேண்டியிருந்தது. சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றி முன்கணிப்புச் செய்வதில் தவறிழைத்த சில பொருளாதார அறிஞர்கள், இப்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து நம்பிக்கை கொண்டுள்ளனர்.


1  2