• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-01 21:34:54    
பெய்சிங்கிலுள்ள சால இனத்தவர்கள்

cri

ஹேன் சென் புவின் பார்வையில், பெய்சிங் மாநகரம், நீக்குப்போக்கான ஒரு நகரம், வெவ்வேறு வகை மக்களை இந்நகரம் ஏற்றுக்கொள்கின்றது. எடுத்துக்காட்டாக அவரது நண்பர்களிடையே, நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களும் அயல் நாட்டு நண்பர்களும் இருக்கின்றனர். சில நேரத்தில் அனைவரும் சேர்ந்து விளையாடி மகிழ்வர். சில நேரத்தில் தேசிய இன நம்பிக்கை, பழக்க வழக்கங்கள் முதலியவற்றினால், நண்பர்களுக்கிடையிலும் தொந்தரவு ஏற்படுவதும் உண்டு. அவர் கூறியதாவது:

"சில நண்பர்கள் என் வீட்டுக்கு வந்து, மதுபானம் அருந்துமாறு என்னை கட்டாயப்படுத்தினர். அதை நிராகரித்தேன். ஏனெனில், எங்கள் சால இனத்தவர்கள் மதுபானம் அருந்தக்கூடாது. இத்தகைய நிலைமையில் தேனீரை அருந்துவோம். இதை நண்பர்களுக்கு விளக்கி கூற வேண்டியிருந்தது. அவர்களை புரிந்து கொள்ள செய்ய வேண்டியிருந்தது" என்றார்.

சால இனம், சீனாவில் இஸ்லாமிய மத நம்பிக்கையுடைய பத்து தேசிய இனங்களில் ஒன்றாகும். இஸ்லாமிய மத விதியின் படி, மத நம்பிக்கை உடையவர்கள் மதுவானம் அருந்தக்கூடாது. பெய்சிங்கில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் ஹேன் சென் புவும் அவரது குடும்பத்தினர்களும் எப்போதும் சொந்த இனத்தின் மத வழக்கங்களுக்கிணங்கச் செயல்படுகின்றனர். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும் வேளையிலும் அவர் தொழுகை நடத்த வீட்டுக்குச் சென்று விடுவார். இருப்பினும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், கட்டாயம் அருகில் உள்ள மசூதிக்குப் போய் தொழுகை செய்கிறார்.

பெய்சிங்கிலுள்ள சால இனத்தவர்களில் பலர், ஹேன் சென் பு போன்று இந்நகரை படிப்படியாக நன்கு அறிந்து வாழ்கின்றனர். இருப்பினும் வேறு பலர் அண்மையில் தான் பெய்சிங் வந்தவர்கள். வேலை வாய்ப்பு, மொழி பிரச்சினை முதலியவை, அவர்களை இன்னல்படுத்துகின்றன. அவரது ஊரைச் சேர்ந்த மா சியூ இங் அம்மையார், பெய்சிங் வந்து ஓராண்டு ஆகிறது. தம் ஊரில் ஒரு துவக்க நிலை பள்ளியில் பாடம் சொல்லிக்கொடுக்கும் அவர், தற்செயலாக பெய்சிங் வந்து, இந்நகரை விரும்பினார். பின்னர், ஊரில் பணியிலிருந்து விலகி, 6 வயதான தம் குழந்தையோடு பெய்சிங் வந்து குடியேறினார். வெகு விரைவில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அல்லது சிறிய கடை ஒன்றை நடத்த வேண்டும் என்றும் மா சிங் இங் அம்மையார் சொன்னார்.

1  2  3