• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-01 21:34:54    
பெய்சிங்கிலுள்ள சால இனத்தவர்கள்

cri

"எனது மிகப்பெரும் விருப்பமானது, இங்கு குழந்தை கல்வி பயில வேண்டும் என்பதாகும். ஒருபுறம், குழந்தை பார்வையை அகலமாக்க முடியும். மறுபுறம், இங்குள்ள கல்வியும் ஒப்பீட்டளவில் முன்னேறியதாகும்" என்றார்.

பெய்சிங்கில் வாழும் சால இனத்தவர்கள் ஒவ்வொருவருடைய குறிக்கோள்கள் வேறுபட்டவை. இருப்பினும், பெய்சிங் மாநகர் மீதான அவர்களின் நேசிப்பு, ஒரேவிதமானது. சால இனத்தவரான Han Ji Shan கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகளில் பெய்சிங்கில் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில வருகை தந்தார். பட்டதாரியான பின், அவர் பெய்சிங் நகரில் பணிபுரியத் துவங்கினார். தற்போது, சீன இஸ்லாமிய மத சங்கத்தில் வேலை புரிக்கின்றார். இச்சங்கம், சீன முஸ்லிம்களை ஒன்றுபடுத்தும் நாடு தழுவிய மத அமைப்பாகும். முஸ்லிம்களுடன் தொடர்புடைய பல்வேறு விவகாரங்களைக் கையாள்வது அதன் முக்கிய பணியாகும். முஸ்லிம் என்ற முறையில், தற்போதைய பணிக்கு அவர் மிகவும் பொருத்தமானவர். அவர் இப்பணியையும் மிகவும் விரும்புகின்றார். பணியில் சிறந்த சாதனை புரிந்ததால், படிப்பதற்காக, அவர் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டார். தாம் புரியும் பணி, நிறைய முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார்.

பணி காரணமாக, அவர், தமது ஊர்வாசிகளுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. சில வேளையில், அவர்கள் ஒன்றுபட்டு, பாடுவர். நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, அவர்கள் பாடிய பாடலாகும். இப்பாட்டு, அவர்களின் ஊரில் பரவலாக பாடப்படுகிறது. சால இனமும் வெள்ளை ஓட்டகமும் பற்றிய கதையைப் பாடல் வர்ணிக்கின்றது. 700 ஆண்டுகளுக்கு முன்பே, மத்திய ஆசியாவின் ஒரு பழங்குடி இனத்தவர்கள், வெள்ளை ஓட்டகத்துடன் இன்றைய சீனாவின் சிங் ஹாங் மாநிலத்துக்கு வந்தார்கள். ஆனால், இந்த ஓட்டகம் காணாமல் போயிற்று. அவர்கள் தேடிக்கொண்டே, சென்ற போது, விடியற்காலையில் வெள்ளை ஓட்டகம் படுத்திருந்த இடத்தில் ஒரே பச்சை நிறம். நீரில் புல் ஓங்கி வளர்கின்றது என்பதை கண்டு அங்கு குடியேறினர். இவர்கள், இன்றைய சால இனத்தவர்களின் முன்னோடிகளாவர்.


1  2  3