
சென் ஹொ மேற்கொண்ட 6வது கடல் பயணத்தில் வங்காளத்திற்குச் சென்றடைந்த போது, அதன் மன்னர் அதிகாரிகளுடன் வர, அன்பளிப்புப் பொருட்களைக் கொண்டு வந்துவைத்து, குதிரைகளை நீண்ட வரிசையாக நிறுத்தி, அணிவகுப்பு மரியாதை செய்து அவரை வரவேற்றார். நாடு திரும்பும் 16 நாடுகளின் தூதர்களை வழியனுப்புவது சென் ஹொ 6வது கடல் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். 7வது கடல் பயணத்தின் போது, சென் ஹொ இஸ்லாமிய மதத்தின் புனித இடமான மெக்காவில் புனித யாத்திரை மேற்கொண்டார். அவர் 7 தடவை மேற்கொண்ட கடல் பயணங்களினால், சீனாவுக்கும் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கடலோர நாடுகளுக்குமிடையிலான தொடர்பு வலுப்பட்டது. பல ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள் சீனாவின் நட்புத் தூதர் சென் ஹொவை மிகவும் பெருமதிப்புடன் போற்றுக்கின்றனர். இதுவரை சில ஆசிய-ஆப்பிரிக்க கடலோர நாடுகளில் சென் ஹொ தொடர்பான மரபுச் சிதிலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, இலங்கையின் தலைநகரான கொழும்பிலுள்ள அருங்காட்சியகத்தில் அக்காலத்தில் சென் ஹொ நிறுவிய நினைவுச் சின்னம் இருப்பதைக் காணலாம். 1 2
|