சியின் யூசி என்பவர், சீனாவின் குவான்சி சுவான் இன தன்னாட்சி பிரதேசத்தின் குவைலின் நகரில் பிறந்தார். அமெரிக்காவில் புகழ்பெறலானர். 1978ம் ஆண்டு, கிழக்கை காணுங்கள் என்றதலைப்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை அவர் தயாரித்து, சீனா மற்றும் ஆசியாவை மேலை நாடுகளின் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். 1992ம் ஆண்டில், ஆசிய பெண்களின் தோற்றத்தை மாற்றும் பொருட்டு, அவர், தமது ஒப்பனை பொருள் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியுள்ளார். உதட்டு சாயம் மூலம் சீனாவின் வடிவத்தை மாற்றியிருப்பதாக, போபுஃஸ் எனும் இதழ் கூறுகிறது.
1972ம் ஆண்டு, சியின் யூசி நியுயார்க் சென்று சகோதரியுடன் சேர்ந்து ஒரு வர்த்தக நிறுவனத்தை நிறுவி, ஆசிய ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் ஈடுபட்டார். ஓய்வு நேரத்தில், அவர் மன்ஹாட்டானிலுள்ள சீன மொழி தொலைக்காட்சி நிலையத்தில் சீன மொழி-ஆங்கில மொழி நிகழ்ச்சிப் பிரிவுக்கு தலைமை ஏற்றார்.
1978ம் ஆண்டில், சியின் யூசியின் சொந்த தொலைக்காட்சி நிறுவனம், முதலாவது முக்கிய நிகழ்ச்சியாக, கிழக்கை காணவும் என்ற வாரம் ஒரு முறை தொடர் நிகழ்ச்சியைத் தயாரித்தது. கீழை நாடுகள் மீது அக்கறை கொண்ட அமெரிக்க பார்வையாளர்களிடம், அந்த நிகழ்ச்சி கிழைப் பண்பாட்டையும் பழக்க வழக்கங்கலையும் அறிமுகப்படுத்தியது. சியின் யூசியின் தனித்தன்மை மிக்க திறமையால், இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருந்தது. இதனால், இந்த நிகழ்ச்சி, விமரிசன துறையில் நல்ல மதிப்பீட்டை பெற்று, பல பரிசுகளையும் வென்றது.
1 2
|