1984ம் ஆண்டில், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 35ம் ஆண்டு நினைவு கொண்டாட்ட விழாவின் நேரடியாக ஒளிப்பரப்பு நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கி ஏற்பாடு செய்யுமாறு, அமெரிக்காவின் பொது தொலைக்காட்சி நிலையம் அவருக்கு அழைப்பு விடுத்தது. 1985ம் ஆண்டு, உலகமெங்கும் என்ற நிகழ்ச்சியைத் தயாரிக்க சீன அரசு சியின் யூசிக்கு சீன அரசு அழைப்பு விடுத்தது. சீனாவின் மிகபெரிய தொலைக்காட்சி நிலையமான மத்திய தொலைக்காட்சி நிலையத்தில், அமெரிக்கர் தயாரித்து வழங்கிய ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது அதுவே முதல் தடவை.
பிறகு, அவர் யூசியின் உலகம் எனும் நிகழ்ச்சியைத் தயாரித்து, சீன ரசிகர்களுக்கு, பிரபலமான சர்வதேச வாழ்க்கை முறைகளை அறிமுகப்படுத்தினார். அவர் தமது தொலைக்காட்சிப் பணி அணுபவத்தில், 25 நாடுகளுக்குச் சென்று, ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளார். இந்த நிகழ்ச்சிகள் உலகளவில் ஒளிப்பரப்பப்பட்டுள்ளன.
அவருடைய தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் ஒப்பனை பொருட்கள் மூலம், கடந்த தலைமுறை சீனர்கள் ஒரு அழகான புதிய உலகத்தைக் கண்டனர். அறிஞர்கள், செய்தியாளர், வணிகர் முதலிய அடையாளங்களைக்கொண்ட அவர், கிழக்கு-மேற்கு பண்பாட்டுத் தொடர்பு பாலத்தை உருவாக்குவதற்கு, முழுமூச்சுடன் பாடுபட்டு வருகிறார். 2002ம் ஆண்டில், அவருடைய தனிச்சிறந்த பங்களிப்பைப் பாராட்டும் பொருட்டு, சீன அரசு, அவர் நினைவாக ஒரு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டது. 1 2
|