• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-06 16:47:22    
ஜப்பானிய போர் கைதிகளுக்கு சீனா மறு வாழ்வு தந்தது

 


cri

இவ்வாண்டு, சீனாவின் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக சீனா நடத்திய போர் மற்றும் 2வது உலக போர் வெற்றி பெற்றதன் 60வது ஆண்டு நிறைவாகும். இன்றைய சீன சமூக நிகழ்ச்சியில் 40 ஆண்டுகளுக்கு முன், ஜப்பானிய போர் கைதிகளுக்கு சீனா மறு வாழ்வு தந்தது பற்றி கூறுகின்றோம்.

புஃ சுன் நகர் வடகிழக்கு சீனாவின் லியௌ நிங் மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு நிலக்கரிப் படிவுகள் அதிகம். ஆகவே இது சீனாவில் புகழ் பெற்றது. இந்நகருக்கு நடுவே பாயும் ஆறு தெற்கு, வடக்கு என்று 2 பகுதிகளாக பிரித்துவிட்டது. ஆற்றின் தெற்கு கரையில், PingDing மலைப்போர் நினைவுக் கூடம் அமைந்துள்ளது. இந்தப் போரில் 3000க்கும் அதிகமான அப்பாவி மக்கள் ஊடுருவி வந்த ஜப்பானிய படையால் கொல்லப்பட்டனர். வடக்கு கரையில் போர் குற்றவாளிகள் மையம் அமைந்துள்ளது. 2வது உலகப் போரின் சுமார் 2000 ஜப்பானிய போர் குற்றவாளிகள் இங்கு மறுவாழ்வு பெற்றனர். அவர்களில் யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவில்லை. 6 முதல் 8 ஆண்டுகள் காவலில் வைக்கப்பட்டு, மறுவாழ்வு பெற்ற பினனர், அவர்கள் எல்லோரும் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினர்.

60 ஆண்டுகளுக்கு முன், ஜப்பானிய ராணுவ வெறியர்கள் சீனாவில் அனைத்து வீடுகளை தீ வைத்துக் கொளுத்துவது, மக்கள் அனைவரையும் கொல்வது, பொருட்களைச் சூறையாடுவது போன்ற மிருகத்தனமான செயல்களில் ஈடுபட்டனர். அவர்கள் சீன மக்களைக் கொன்று, நிலக்கரி உள்ளிட்ட கனிம வளங்களைச் சூறையாடி, சீன மக்களிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. போருக்குப் பின், சீன அரசு ஜப்பானிய போர் குற்றவாளிகளுக்கு மனிதாபிமானக் கல்வி அளித்து, அவர்களைக் குற்றவாளிகள் என்ற நிலையில் இருந்து அமைதியை நாடுரூவராக மாற்றி, ஓர் அற்புதத்தை உருவாக்கியது.

80 வயதான Yamaguchi Izo மறு வாழ்வு பெற்ற ஜப்பானிய போர்குற்றவாளிகளில் ஒருவர். 80 வயதுக்கு மேற்பட்ட அவருடைய மனதில், அப்போதைய அனுபவம் இன்னும் பசுமையாக பதிந்திருக்கின்றது. அவர் கூறியதாவது,

அங்கே மனிதாபிமான முறையில் நாங்கள் நடத்தப்பட்டோம். மனதில் போரின் போது இழைத்த குற்றத்தை நான் மனமார உணர்ந்துவிட்டேன். புஃ சுன் எனது மறு பிறப்பு இடமாகும் என்றார் அவர்.

கடந்த நூற்றாண்டின் 50வது ஆண்டுகளின் துவக்கத்தில், சீனாவில் மொத்தம் 1062 போர் குற்றவாளிகள் இருந்தனர். அவர்களில் 969 பேர் புஃ சுனில் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களால் சுமார் ஒரு இலட்சம் சீன படைவீரர்களும் மக்களும் கொல்லப்பட்டனர். சீனாவில் அவர்கள் அபகரித்த சொத்து ஏராளமானது.

ஜப்பானிய ராணுவ வெறியால் மூளைச் சலவை செய்யப்பட்ட ஜப்பானிய போர்க் குற்றவாளிகளை, சீன அரசு மனிதாபிமானத்துடன் நடத்தியது. Cui ren jie என்பவர் புஃ சுன் போர் குற்றவாளிகளை நிர்வகிப்பதில் பணி புரிந்திருக்கின்றார். இதர பணியாளர்களைப் போல் அவர் பகைமை காட்டாமல், போர் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளித்தார். அவர் கூறியதாவது,

போர் குற்றவாளிகளின் வாழ்க்கை தரம் அப்போதைய சாதாரண சீன மக்களின் வாழ்க்கை தரத்தை விட பல மடங்கு உயர்வாக இருந்தது. சோறு, கோதுமை, பச்சை காய்கறி, இறைச்சி, முட்டை ஆகியவை போதிய அளவில் அவர்களுக்கு வழங்கப்பட்டன. வாரத்துக்கு ஒரு முறை ஓரிரு திரைப்படங்களைக் காட்டப்பட்டன. பகலில், பாதி நேரம் பயில வேண்டும். பாதி நேரம் விளையாட்டுக்களில் கலந்து கொள்ளலாம் என்றார் அவர்.

அங்கு பணியாளர்கள் அனைவரும் ஜப்பானிய மொழி பேசக் கூடியவர்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயங்களிலும் அவர்கள் குற்றவாளிகளைக் கவனித்தனர். தத்துவ கல்வி, பரஸ்பர உதவி குழு ஆகிய வழிமுறைகளின் மூலம், இந்த போர் குற்றவாளிகள் போரின் போது இழைத்த குற்றத்தை உணர்ந்து, தாம் செய்த குற்றத்துக்கேற்ப கடும் தண்டைனை விதிக்குமாறு சீன அரசிடம் கோரினர்.

1956ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில், சீன மீயுயர் மக்கள் நீதி மன்றத்தின் சிறப்பு ராணுவ மன்றத்தில், போர் குற்ற வழக்கு விசாரணை நடைபெற்றது. கடும் குற்றம் இழைத்த 45 குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வேறு 1017 குற்றவாளிகள் இலகுவாகக் கையாளப்பட்டு, விடுவிக்கப்பட்டனர்.

1  2