• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-06 16:47:22    
ஜப்பானிய போர் கைதிகளுக்கு சீனா மறு வாழ்வு தந்தது

 


cri

ஹேக் சர்வதேச நீதி மன்றத்தில்

விசாரணை முடிவு அறிவிக்கப்பட்ட போது, போர் குற்றவாளிகளில் யாரும் மேல் முறையீடு செய்யவில்லை. அவர்கள் வருத்தத்துடனும் நன்றி உணர்வுடனும் அழுதனர். விசாரணை செய்தவரின் நிலைப்பாடும், விசாரணை செய்யப்பட்டோரின் நிலைப்பாடும் வேறுபட்ட போதிலும், நீதி மன்றத்தில் அனைவரும் ஜப்பானிய ராணுவ வீரர்களின் குற்றத்தைக் கண்டித்தனர். சர்வதேச விசாரணை வரலாற்றில் இது முன்பு காணப்படாதது என்று வெளிநாட்டு செய்தியாளர்கள் கூறினர்.

இந்த ஜப்பானியர்கள் நாட்டுக்குத் திரும்பிய பின், ஜப்பானிய-சீன நட்புறவு, உலக சமாதானம் ஆகியவற்றுக்காகப் பாடுபடப் போவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 1957ஆம் ஆண்டு, சீனாவிலிருந்து திரும்பியவர்களின் சங்கம் நிறுவபட்டது. நூல்களை வெளியிடுவது, பொருட்காட்சிகளை நடத்துவது ஆகியவற்றின் மூலம், இந்த ஜப்பானிய ராணுவ வீரர்கள் சீனாவில் இழைத்த குற்றத்தை வெளிப்டுத்தினர். அவர்களின் செயல்கள் ஜப்பானிய தலைமுறையினரிடையே தாக்கத்தை ஏற்படுத்தின. 2002ஆம் ஆண்டு, அவர்களின் குழந்தைகளும் சில சமாதானத்தை நேசிக்கும் பிரமுகர்களும், புஃ சுன் அற்புதத்தை அங்கீகரிக்கும் மன்றத்தை உருவாக்கி, இரு நாட்டு நட்புறவு என்ற எழுச்சியைத் தொடர்கின்றனர்.

ஜப்பானிய போர் குற்றவாளிகளுக்கு சீனா மறுவாழ்வு தந்தது உலக சிறை வரலாற்றில் ஓர் அற்புதம் என்று கூறப்படுகின்றது. முன்பு ஆக்கிரமிப்பு படையின் உயர் அதிகாரிகள், இப்போது போர் எதிர்ப்பு தூதராக மாறியுள்ளனர். இது பற்றி, புஃ சுன் சமூக அறிவியல் கழகத்தின் சீன-ஜப்பானிய உறவை ஆராயும் அறிஞர் புஃ பௌ கூறியதாவது,

ஏன் அற்புதம் நிகழ்ந்தது? எமது மறு வாழ்வுப் பணிகள் அன்புணர்வு நிறைந்ததாக இருந்தது. அவர்கள் 5 ஆண்டுகள் மகுவாள்வு பெற்றனர். ஆனால், அதன் தாக்கம் 50 ஆண்டுகளுக்கு மேலும் தொடர்கின்றது என்றார் அவர்.

இந்த போர் குற்றவாளி நிர்வாக மையம் தற்போது, வரலாற்றை மறு ஆய்வு செய்து பிரச்சாரம் செய்யும் பொருட்காட்சி கூடமாக மாறியுள்ளது. கடந்த மே திங்கள், மேலும் சில ஜப்பானிய குற்றவாளிகள் இங்கே வந்து, மன்னிப்பு கேட்டனர்.

அப்போதைய மறு வாழ்வுப் பணியாளர் சுய் சியே இவ்வாண்டு 80 வயதாகிவிட்டார். போரிலும் மறுவாழ்வுப் பணியிலும் கலந்து கொண்டு, சமீப கால சீன-ஜப்பானிய உறவின் வளர்ச்சிக் கண்டு, இந்த முதியோர் இரு நாட்டு இளைஞர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

இரு நாட்டு இளைஞர்கள்

வரலாற்றை நேரில் கண்ட நான், இரு நாட்டு இளைஞர்கள் வரலாற்றை மறக்கக் கூடாது, வரலாற்றை சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றேன். அண்மையில், ஜப்பானில் வலது சாரிகளின் செயல்களைக் கண்டு மன வருத்தம் அடைந்தேன். தற்போதைய சமாதான சூழ்நிலையை இரு நாட்டு இளைஞர்கள் பேணிக்காத்து, எதிர்காலத்தை எதிர்நோக்க வேண்டும் என்று விரும்புகின்றேன் என்றார் அவர்.


1  2