• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-11 10:46:51    
குவாங் சியின் பொருளாதார வளர்ச்சி

cri

சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசம் தென் கிழக்கு ஆசிய நாடுகளை ஒட்டியமைந்துள்ளது. 1992ஆம் ஆண்டில் இப்பிரதேசத்தை தென் மேற்கு சீனாவின் கடல் ஊடுவழியாக சீன அரசு வகுத்தது. கடந்த சில ஆண்டுகளாக, சொந்த மேம்பாடுகளை குவாங் சி பயன்படுத்தி, அந்நிய வர்த்தக அளவை விரிவாக்கி, முதலீட்டு சூழலை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது.

குவாங் சி சுவாங் இனத் தென்னாட்சி பிரதேசத்தின் கிழக்கில், பொருளாதார வளர்ச்சி அடைந்த தென் கிழக்கு கடற்கரை பிரதேசம் உள்ளது. அதன் தென் மேற்கில் வியட்நாமை ஒட்டியமைக்கும் ஆயிரம் கிலோமீட்டர் நீளமான எல்லை கோடு. அதற்கு பெரும் புவியியல் மேம்பாடு உண்டு.

தற்போது, குவாங் சியில், 12 எல்லை புற நகரங்களும் 21 துறைமுகங்களும் உள்ளன. வியட்நாம் வழியாக தென் கிழக்காசிய நாடுகளுக்கு செல்லும் சீனாவின் 3 முக்கிய நெடுஞ்சாலைகளில் இரண்டு குவாங் சியில் உள்ளன. இங்குள்ள இருப்பு பாதை வியட்நாமிலுள்ள இருப்பு பாதையுடன் இணைந்து, வியட்நாமின் தலைநகர் ஹநோய்க்கு நேரடியாக செல்கிறது. தவிர, அங்குள்ள துறைமுகம் வழியாகச் சென்றால், சீனப் பெருநிலப்பகுதியிலிருந்து ஆசியான் நாடுகளுக்கு தொலைவு மிகவும் குறைவாக உள்ளது. இந்த தன்னாட்சி பிரதேசத்திலுள்ள நான்நிங் நகரமும் குய்லின் நகரமும் ஆசியானின் பல நாடுகளுடன் விமான வழித்திடங்களை திறந்துவிட்டுள்ளன.

துங்சிங் நகர், குவாங் சியின் எல்லை புற நகர்களில் ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் விடிகாலையிலேயே பல நூறு துங்சிங் நகரவாசிகள் எல்லையை கடக்க காத்திருக்கின்றனர்.

துங்சிங் நகரில் 1000க்கு அதிகமானோர் எல்லையை கடந்து சென்று வியாபாரம் செய்கின்றனர். அதே போல, துங்சிங் நகருக்கு வந்து வியாபாரம் செய்யும் வியட்நாம் மக்கள் மிகவும் அதிகம். தற்போது, சீனாவின் மிக முக்கிய தரை வழி நுழைவாயில்களில் ஒன்றாக துங்சிங் நகரம் மாறிவிட்டது. அதன் வழியாக போய் வரும் மக்களின் எண்ணிக்கை சீனாவில் 3வது இடம் வகிக்கிறது. கடந்த ஆண்டில் அதன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் 200 கோடி யுவானைத் தாண்டியது.

1  2