• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-11 10:46:51    
குவாங் சியின் பொருளாதார வளர்ச்சி

cri

துங்சிங் நகரின் வளர்ச்சி, குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள எல்லை வர்த்தக நகரங்களின் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. தற்போது, தென் கிழக்காசிய நாடுகளுக்கு குவாங் சி ஏற்றுமதி செய்யும் பொருட்களில், ஆடை, வீட்டு பயன்பாட்டு மின் கருவி, இயந்திர சாதனம் ஆகியவை முக்கியமாக அடங்கும். அந்த நாடுகளிலிருந்து வேளாண் பொருட்களையும், தொழில் மூலப் பொருட்களையும் குவாங் சி இறக்குமதி செய்கிறது. கடந்த ஆண்டு, ஆசியான் நாடுகளுடன் குவாங்சியின் வர்த்தகம் 100 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியது. இது குவாங் சியின் மொத்த வர்த்தகத்தில் சுமார் 25 விழுக்காடு வகிக்கிறது.

3 ஆண்டுகளுக்கு முன், ஆசியானுடன் பன்முகங்களிலும் பொருளாதார ஒத்துழைப்பு மேற்கொள்ளும் கட்டுக்கோப்பு உடன்படிக்கையில் சீனா கையொப்பமிட்டு, சீன-ஆசியான் சுயேச்சை வர்த்தக மண்டலத்தை உருவாக்கத் துவங்கியது. இதனால் புதிய வளர்ச்சி வாய்ப்புகள் குவாங் சியிற்கு கிடைத்துள்ளன. தென் கிழக்காசிய நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த, அடிப்படை வசதிகளை குவாங் சி தொடர்ந்து முழுமையாக்கி, முதலீட்டு சூழலை மேம்படுத்தி வருகிறது. உள்ளூர் போக்குவரத்து நிலையை மேம்படுத்துவது இதில் மிக முக்கியமாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, பிரதேசத்துக்கு உள்பட்ட போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்த குவாங் சி பெரும் தொகை ஒதுக்கீடு செய்தது. கடந்த ஆண்டில் தான், நெடுஞ்சாலை கட்டுமானத்தில் ஓர் ஆயிரத்து 300 கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டது.

மலைப் பிரதேசத்திலுள்ள ஷாங் சி மாவட்டம், போக்குவரத்து மேம்படுவதன் மூலம் பயன் பெறும் இடங்களில் ஒன்றாகும். 2002ஆம் ஆண்டுக்கு முன், இந்த மாவட்டத்தில் போக்குவரத்து இல்லாததால், முதலீட்டு திட்டப்பணிகள் எதையும் ஈர்க்கவில்லை. 2003ஆம் ஆண்டில், இந்த மாவட்டத்தில் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்ட பின், பல்வேறு இடங்களின் பல வணிகர்கள் இங்கு வந்து முதலீடு செய்து ஆலையை நடத்துகின்றனர்.

இப்பகுதியின் புவியியல் மேம்பாட்டினால், குவாங் சிக்கு அந்நிய வர்த்தக வளர்ச்சி மற்றும் முதலீடு கிடைத்திருப்பதோடு, சுற்றுலா துறை, சேவை துறை உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சியும் அதிகரித்துள்ளது. தற்போது, சர்வதேச சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக தென் கிழக்காசிய நாடுகளின் பயணிகள் வருகை தரும் முக்கிய இடமாக இது மாறிவிட்டது. கடந்த ஆண்டில், 11 லட்சத்து 50 ஆயிரம் அந்நிய பயணிகளை குவாங் சி வரவேற்றது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சுற்றுலா மூலம் கிடைத்த அந்நிய செலாவணி வருமானம் 30 கோடி அமெரிக்க டாலரை நெருங்கியது. மேலும், சீன பயணிகள் தென் கிழக்காசி நாடுகளுக்கு செல்லும் முக்கிய வழிகளில் ஒன்றாகவும் குவாங் சி உள்ளது. ஆண்டுதோறும் 5 லட்சம் சீன பயணிகள் குவாங் சியிலுள்ள நுழைவாயில்களின் மூலம் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.


1  2