• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-14 10:00:06    
ஷாங்சி மாநிலத்தில் மதச் சுற்றுலா

cri

அழகும் வலுவும் ஆன்மீகமும் இணைந்து கட்டப்பட்ட இக்கோயில்,

அடிவாரத்தில் கட்டப்பட்டிருப்பதால், புயல் காற்று வீசிய போதிலும் பாதிக்கப்படவில்லை. தவிர, கோயிலுக்கு முன் மலை இருப்பதால் வெயில் தெரிவதில்லை. கோடை காலத்தில் நாள்தோறும் இக்கோயிலுக்குள் 3 மணி நேரம் மட்டுமே வெய்யில் படுகிறது. இதனால், கடந்த பல்லாயிரம் ஆண்டுகளில் மழை, புயல் காற்று, நில நடுக்கம் ஆகியவற்றை இக்கோயில் தாக்குப்பிடித்து நின்றுள்ளது. இக்கோயிலில் ஏறும் போது பயமாக உள்ளது என்று பயணி கொங்யிஃபான் கூறினார்.

இக்கோயில் செங்குத்தான மலையில் கட்டப்பட்டதற்கு மற்றொரு காரணமும் உண்டு. இது பற்றி இக்கோயிலிலுள்ள இளம் மதத்தவர் சியெஹௌ கூறியதாவது--

"முன்பு, தெற்கை நோக்கி ஹுதைய் மலைக்கும் வடக்கை நோக்கி தாதொங் நகருக்கும் செல்லும முக்கிய போக்குவரத்து பாதையாக இவ்விடம் விளங்கியது. சியெகொங் கோயில் இங்கு கட்டப்பட்டதால், மத நம்பிக்கையுடையவோர் வழிபாடு செய்வதற்கு வசதியாக உள்ளது."

சியெகொங் கோயிலில் பல்வகை செப்பு உருவச்சிலைகளும் மண் உருவச்சிலைகளும் கல் உருவச்சிலைகளும் ஆக 80க்கும் அதிகமான சிலைகள் உள்ளன. இக்கோயிலின் மிக கடைசியான மாடியிலுள்ள மண்டபத்தில், பௌத்த மதத்தைத் தோற்றுவித்தவரான சாக்கியமுனி புத்தர், கன்ஃபூசியஸ், லௌசி, ஆகியோரின் உருவச்சிலைகள் காணப்படுகின்றன. சீனாவில் பௌத்த மதம், தாவ் மதம், கன்ஃபூயியஸ் மதம் ஆகியவற்றைத் தோற்றுவித்தவர்களின் உருவச்சிலைகளை ஒரே அறையில் காண்பது அரிது.

ஹங்சான் மலையை விட்டுத் தெற்கு நோக்கித் தொடர்ந்து சென்றால், சுமார் 3 மணி நேரத்துக்குப் பின், வூதைய் மலையை அடையலாம். வூதைய் மலை, சீனாவின் 4 புகழ்பெற்ற மலைகளில் ஒன்றாகும். அது, ஸ்சுவான் மாநிலத்தின் அமெய் மலை, செக்கியாங் மாநிலத்தின் புதூ மலை, அன்ஹுவெய் மாநிலத்தின் ஜுஹுவா மலை ஆகியவற்றைப் போல புகழ்பெற்றது. வூதைய் மலையின் மிக உயரமான இடம், கடல் மட்டத்திலிருந்து மூவாயிரம் மீட்டருக்கு மேலே உள்ளது. அது, வட்டமானதாக 5 மலைகளால் சூழப்பட்டுள்ளது. தற்போது வூதைய் மலையில் பிரபல சியெதொன் மற்றும் தாயுவான் கோயில்கள் உட்பட சுமார் 50 கோயில்கள் உள்ளன. இவ்விடத்திலுள்ள கம்பீரமான கட்டடங்கள், நுட்பமான செதுக்கல் வரலாறு விட்டுச்சென்ற தொல் பொருட்களின் சின்னங்கள் ஆகியவை உள்ளன. வழிகாட்டி லீச்சின் கூறியதாவது--

"வூதைய் மலை கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்தில் அமைந்திருப்பதால் அக்டோபர் திங்களுக்குப் பின் அங்கு செல்ல வேண்டாம். முன்பு நான் அங்கு சென்ற போது பனி பெய்தது. குளிர். வூதைய் மலையில் கோயில்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. வழிபாடு செய்பவர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்" என்றார் அவர்.


1  2