
ஆண்டின் குறிப்பிட்ட நாளில், உள்ளூர் மக்கள் அணிதிரண்டு வந்து, உறைபனியாய்க் காட்சி தரும் ஏரியில் மாபெரும் துளையிடுவர். ஒரு மீட்டர் அகலத்துக்கு அந்தத் துளை இருக்கும். பிறகு, மீன் பிடிக்கப் பயன்படும் வலைகளைத் துளை வழியாக உள்ளே செலுத்துவார்கள். குறிப்பிட்ட நேரம் வரை பொறுமையுடன் காத்திருப்பார்கள். வலைகளில் சிக்கிய மீன்களை வெளியே எடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கும் போது, முப்பது பேர் ஒன்று சேர்ந்து வலைகளை வெளியே இழுத்துப்போடுவார்கள். இதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்துவதும் உண்டு. அதிக அளவாக ஒரு முறை 83 டன் மீன் கிடைத்ததாம். 23 வகை மீன்கள் இந்த ஏரியில் குடியிருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக இப்படிப்பட்ட நாளின் முடிவில், ஒவ்வொருவரும், இன்னும் சொல்லப்போனால், இப்பகுதி வாழ் மக்கள் அனைவரும்"மீன் விருந்து"க்கு ஆயத்தமாகின்றனர்.

இந்தப் பகுதியில் வளர்க்கப்படும் செம்மறியாடுகள் குறிப்பிடத்தக்க சிறப்பு பெற்றுள்ளன. இந்தப் பகுதியின் ஆட்டிறைச்சி, தங் வமிச ஆட்சியாளருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது."சின்ஜியாங் ஆடு, பசுமாடு போல் பெரிதாக இருக்கும்"என்று சில ஆவணங்களில் குறிக்கப்பட்டுள்ளது. பூஹாய் ஆட்டிறைச்சியின் சிறப்புக்கு, அங்கிருக்கும் புல்லும், தூய நீரும் தான் காரணம் என்று மக்கள் கூறுகின்றனர். பூஹாயில் தவறாது கண்டு களிக்க வேண்டிய இடமாக அல்க்ஸா( AIXA) பள்ளத்தாக்கு விளங்குகிறது. மங்கோலிய மொழிலிலான இந்தப் பெயருக்கு,"வெந்நீர் ஊற்று மிகுந்த பள்ளத்தாக்கு"என்பது பொருள். சுற்றியுள்ள காட்சித்தலத்தில் குன்றுகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்தப் பள்ளத்தாக்கில் மொத்தம் 24 வெந்நீர் ஊற்று காணப்படுகின்றது. ஊற்று நீரின் வெப்ப அளவு 30 முதல் 60டிகிரி சென்டிகிரேடு வரை இருக்கும். 1 2 3
|