சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கட்டிடம் பெய்ஜிங் மாநகரத்தின் தெற்கு யு யுவான் டான் சாலையில் அமைந்துள்ளது. இதற்கு அருகிலுள்ள கட்டிடங்களுடன் ஒப்பிடும் போது, இது சிறப்பாக இல்லை. ஆனால், சாதாரண வடிவம் படைத்த இது தற்போது சீனாவில் ஏன் ஆசியா முழுவதிலுமே எரியாற்றலை சிக்கனப்படுத்தும் தலைசிறந்த தொழில் நுட்ப திறமையை பிரதிபலிக்கின்றது.
அமெரிக்காவின் மாசற்ற கட்டிட தங்க பரிசு பெறுவதற்காக இது விண்ணப்பம் செய்துள்ளது. இப்பரிசு பெறும் முதலாவது சீன திட்டப்பணியாக இது மாறக்கூடும்.
13 ஆயிரம் சதுர மீட்டர் பரப்புடைய இந்தக் கட்டிடம் பயன்படுத்தும் எரியாற்றல் அளவு, சீனாவில் அதே பரப்புடைய கட்டிடம் பயன்படுத்தும் எரியாற்றல் அளவில் 30 விழுக்காடு தான் என்று சீன அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் ஆய்வு மையத்தின் துணைத் தலைவர் யாங் கௌ சியுங் கூறினார். எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் இதன் வழிமுறைகள் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் ஆசிய பசிப்பிக் பிரதேசத்தில் மாதிரியாக இருக்கும் என்றார் அவர்.
சிலுவை வடிவம்
பணியக கட்டிடத்தில் கோடைகாலத்தில் குளிர் காற்றை உருவாக்குவதற்குத் தேவையான எரியாற்றல் அளவு, குளிர்காலத்தில் வெப்ப ஆற்றலை உருவாக்குவதற்குத் தேவையானதை விட மிக அதிகமானது என்று கணிணி ஆய்வு காட்டுகின்றது. ஆகையால், சூரிய வெப்பத்தைக் கூடிய அளவில் குறைத்து, இயற்கை ஒளியையும் காற்றின் ஆற்றலையும் அதிகரிப்பது தலைசிறந்த வழியாகும். ஏனென்றால், இந்த கட்டிடம் சிலுவை வடிவத்தைத் தேர்ந்தெடுத்தது. ஓரே நிலைமையில், சதுக்கமான கட்டிடத்தை விட இது 5 விழுக்காடு எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும்.
1 2
|