வெப்பத்தைக் காப்பாற்றுவது
இந்த கட்டிட சுவரில், 2 செங்கல்களுக்கும் இடையில் வெப்பத்தைப் பாதுகாக்கும் இடைவெளி இருக்கின்றது. பாரம்பரிய செங்கல் சுவரை விட, இந்த கட்டிடம் ஆடை அணிவது போல் இருக்கின்றது.
குளிர்காலத்தில் பூஜ்யத்துக்கு கீழ் பத்துக்கும் மேற்பட்ட திகிரி செல்சியஸ் ஆள் இல்லாத நிலையில் இக்கட்டிடத்தில் தொடர்ந்து 50 மணி நேரத்திற்கு வெப்ப காற்று விநியோகம் துண்டிக்கப்பட்டது. ஆனால், கட்டிடத்துக்கு உள்ளே இருந்த வெப்பம் ஒரு திகிரி செல்சியஸ் மட்டுமே குறைந்தது.
விவேகமான விளக்கு

முழு கட்டிடத்தில் விளக்கு விசை ஒன்றும் இல்லை. விளக்குகள் எல்லாம், ஒளி உணர் கருவியினாலும் அகச்சிவப்பு உணர் கருவியினாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன.
லிப்ட்

சாதாரண லிப்ட் ஆட்களின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், இயங்கும் ஒவ்வொரு முறையும் ஒரே அளவிலான மின்னாற்றலை எடுக்கின்றது. இக்கட்டிடத்தில் பொருத்தப்படுகின்ற லிப்ட் அலை மாற்று தொகுதியைப் பெறுகின்றது. ஆட்களை ஏற்றிச்செல்லும் போது ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இதன் மின் அலை மாறி, நுகர்வை சிக்கனப்படுத்தலாம். 1 2
|