• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-21 12:05:04    
எட்டு நாடுகள் குழுவின் உச்சி மாநாடு

cri

அண்மையில் எட்டு நாடுகள் குழுவின் உச்சி மாநாடு பிரிட்டனில் நடைபெற்றது. இந்த மாநாடு எப்படி உருவாகியது பற்றி சீனாவின் ஹுபேய் மாநில நேயர் வான்யாக்குவான் கேட்கிறார்.

இது பற்றி கலையரசி தொகுத்து பதிலளிக்கிறார்.

நேயர்களே எட்டு நாடுகள் குழுவின் உச்சி மாநாடு மேலை ஏழு நாடுகளின் உச்சி மாநாட்டிலிருந்து மாறுபட்டது. எட்டு நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான், ரஷியா ஆகிய நாடுகள் உள்ளன. பொருளாதார வளர்ச்சியை கூட்டாக மதிப்பிட்டு கையாளும் கொள்கையை விவாதித்து, இணக்கமான நிலைப்பாட்டை பின்பற்றி மேலை நாடுகளின் பொருளாதாரத்திற்கு மறுமலர்ச்சி ஊட்டுவதற்காக 1975ம் ஆண்டு ஜுலை திங்கள் பிரான்ஸின் யோசனையின் படி அதே அண்டு நவெம்பர் திங்கள் பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் புறநகரான ரன்புயியே வில் பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மன் கூட்டாட்சி, ஜப்பான், பிரிட்டன், இத்தாலி ஆகிய 6 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட முதலாவது கூட்டம் நடைபெற்றது. 1976ம் ஆண்டு ஜுன் திங்கள் பொதோரிக்கோவின் சன்வூஆனில் அதன் 2வது கூட்டம் நடைபெற்றது. அப்போது கனடா அதில் கலந்து கொண்டது. அப்போது இந்த உச்சி மாநாடு ஏழு மேலை நாடுகள் குழுவின் உச்சிமாநாடு என்று அழைக்கப்பட்டது. 1977ம் ஆண்டில் நடந்த மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் அழைப்பை ஏற்று மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது முதல் ஏழு நாடுகள் குழுவின் உச்சி மாநாடு ஓர் அமைப்பாக உறுதிப்படுத்தப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை மாறி மாறி உறுப்பு நாடுகளின் நாட்டில் ிந்த மாநாடு நடத்தப்படுகின்றது. 1991ம் ஆண்டு ஜுலை திங்களில் சோவியத் அரசு தலைவர் கோர்பாச்சேவ் முதல் முறையாக 7 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு இந்த 7 நாடுகளின் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், 7 மேலை நாடுகளும் ரஷியாவும் பேச்சுவார்த்தையில் ரஷிய தலைவர் கலந்து கொண்டார். 1994ம் ஆண்டு அரசியல் பிரச்சினை பற்றிய விவாதத்தில் கலந்து கொள்ளும் அனுமதி ரஷியாவுக்கு வழங்கப்பட்டது. 1997ம் ஆண்டு ஏழு நாடுகள் உச்சி மாநாடு அமெரிக்காவின் தைன்பேஃர் நகரில் நடைபெற்ற போது அதிகாரப்பூர்வ உறுப்பு நாடு என்ற முறையில் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அரசு தலைவர் கிளிட்டன் ரஷிய அரசு தலைவர் யெல்த்சினை அழைத்தார். ஏழு நாடுகள் குழுவின் உச்சிமாநாட்டில் எட்டு நாடுகள் குழுவின் பெயரில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. 1997ம் ஆண்டுக்குப் பிறகு ஏழு மேலை நாடுகளின் உச்சி மாநாடு எட்டு நாடுகள் குழுவின் உச்சிமாநாடு என்று மாற்றப்பட்டது.

1  2