• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-21 12:05:04    
எட்டு நாடுகள் குழுவின் உச்சி மாநாடு

cri

ஓலிம்பிக் நன்கொடை வணிகர் என்றால் என்ன?

ஒலிம்பிக்கிற்கு நன்கொடை வழங்கும் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கும் ஒலிம்பிகிற்குமிடையில் ஏற்படுத்தப்படும் தொடர்பாகும். இந்த தொடர்பு ஏற்படுத்தப்பட்ட பின், தொழில் நிறுவனங்கள் ஒலிம்பிக் நடவடிக்கைக்கும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கும் உதவி வழங்கலாம்.. அதன் மூலம் அவற்றின் புகழும் வணிகச் சின்னமும் உயர்கின்றன. ஒலிம்பிக் நன்கொடை வணிகர்களில் 3 நிலைகள் உள்ளன. ஒலிம்பிக் ஒத்துழைப்பு கூட்டாளி நடப்பு ஒலிம்பிகிற்கு உதவும் வணிகர்கள், பல்வேறு நாடுகளின் ஒலிம்பிகிற்கான உதவி வணிகர்கள் என்பன மூன்று நிலைகளாகும். வெவ்வேறு நன்கொடை வணிகர்களுக்கு வழங்கப்படும் ஒலிம்பிக் இலச்சினை, ஒலிம்பிக் சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தும் உரிமையும் பிரச்சார உரிமையும் வேறுபட்டவை.

ஒலிம்பிக் ஒத்துழைப்பு கூட்டாளி உலக அளவில் ஒலிம்பிக்குடன் தொடர்புடைய சின்னத்தை பயன்படுத்த முடியும். 5 வளையங்கள் உள்ள ஒலிம்பிக் கொடியை பயன்படுத்தும் உரிமையை சுதந்திரமாக அனுபவிக்கலாம். ஒரு துறையில் ஒலிம்பிக் ஒத்துழைப்பு கூட்டாளி வணிகர் ஒருவர் மட்டுமே இருக்க முடியும். நடப்பு நன்கொடை வணிகர் உலகளவில் ஒலிம்பிக் 5 வளைய ஒலிம்பிக் கொடியை தவிர ஒலிம்பிக்குடன் தொடர்புடைய ஏனைய சின்னங்களை பயந்படுத்தலாம். பல்வேறு நாடுகளின் நன்கொடை வணிகர்கள் சொந்த நாட்டில் சொந்த நாட்டின் ஒலிம்பிக் சின்னம் மட்டுமே பயன்படுத்தலாம்.


1  2