• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-25 11:02:29    
Shan Xi மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி

cri
2000ஆம் ஆண்டு, மேற்கு பகுதிக்கான பெரும் வளர்ச்சி நெடுநோக்கு திட்டத்தை சீன அரசு நடைமுறைப்படுத்திய பின், சீனாவின் மேற்கு பகுதியில் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியுற்று வருகின்றது. Shan Xi மாநிலம், இந்நெடுநோக்கு திட்டம் நடைமுறைக்கு வந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளாக, உள்ளூரில் கிடைக்கும் வேளாண் விளை பொருள், கனிம பொருள், அறிவியல் தொழில் நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட வளங்களை Shan Xi மாநிலம் முழுமையாகப் பயன்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் பெரும் சாதனை பெற்றுள்ளது.

Shan Xi மாநிலத்தில் வேளாண்த் துறை வளர்ச்சியடைந்துள்ளது. இதன் விளை நிலப்பரப்பு, 48 லட்சம் ஹெக்டரைத் தாண்டியுள்ளது. சீனாவின் மொத்த விளை நில பரப்பில் இது சுமார் 4 விழுக்காடாகும். ஆனால், நீண்டகாலமாக, இம்மாநிலத்தின் வேளாண்மையில் அறிவியல் தொழில் நுட்ப நிலையும் தொழில் மயமாக்க நிலையும் குறைவாகவே இருந்து வந்தன. பொருளாதாரப் பயன் குறைவு. வேளாண்மையின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில், Shan Xi மாநிலம் தானிய விளைச்சலை உத்தரவாதம் செய்யும் வேளையில், இம்மாநிலத்தில் வேறுபட்ட பிரதேசங்களின் இயற்கை நிலைமைக்கிணங்க, ஆப்பிள், காய்கறி, மலர் வளர்ப்பு உள்ளிட்ட சிறப்பு தொழில்களை பெரிதும் வளர்த்துள்ளது. தவிர, 1998ஆம் ஆண்டு, Shan Xi மாநிலத்தின் நடுப்பகுதியில் உள்ள Yang Ling பிரதேசத்தில், புதிய உயர் தொழில் நுட்ப வேளாண் தொழில் மண்டலத்தை முன் மாதிரியாக சீன அரசு நிறுவியது. சீனாவில் உள்ள ஓரே ஒரு அரசு நிலை வேளாண்மை முன் மாதிரி மண்டலம் இதுவாகும். வேளாண்மை அறிவியல் தொழில் நுட்ப ஆய்வையும், வேளாண்மை புதிய உயர் தொழில் நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியையும் இம்முன் மாதிரி மண்டலம் இணைத்து, இம்மாநிலத்தில் புதுமுறை வேளாண் வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது.

7 ஆண்டுகால முயற்சிகளின் மூலம், தற்போதைய Yang Ling, பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறு நகர் என்ற நிலையில் இருந்து, 110 கோடி யுவான் ஆண்டு உற்பத்தி மதிப்பு உடைய வேளாண் தொழில் மண்டலமாக வளர்ச்சியடைந்துள்ளது. உயர் தரமான விதைகள் மற்றும் கால் நடைகளின் இனப்பெருக்கம், பசுமையான வேளாண் உற்பத்திப் பொருட்களின் உற்பத்தி மற்றும் பதனீட்டை மையமாக கொண்ட தொழில் கட்டமைப்பு பூர்வாங்க ரீதியில் உருவாகியுள்ளது.

1  2