Yang Ling முன் மாதிரி மண்டலம் நிறுவப்பட்ட பின், சுமார் 600 வேளாண் தொழில் நுட்பங்கள் வினியோகிக்கப்பட்டன. 30 லட்சத்துக்கு அதிகமான விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும், இம்முன் மாதிரி மண்டலத்தினால் ஏற்படும் பொருளாதார ஆதாயம் ஒரு ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. புள்ளி விபரங்களின் படி, கடந்த ஆண்டு, Shan Xi மாநிலத்தில், வேளாண்த்துறை உருவாக்கிய உற்பத்தி மதிப்பு, இம்மாநிலத்தின் மொத்த பொருளாதார அளவில் 10 விழுக்காட்டுக்கு அதிகமாகும்.
சீனாவின் மேற்கு பகுதியில், வளம் செழிப்பானது. மேற்கு பகுதியில், Shan Xi மாநிலம், கனிமப் பொருட்கள் மிக அதிகமான மாநிலங்களில் ஒன்றாகும். குறிப்பாக, வட Shan Xi மாநிலத்தில், நிலக்கரி, இயற்கை வாயு, கச்சா எண்ணெய் ஆகியவற்றின் படிவுகள், சீனாவிலேயே மிக அதிகமாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளில், Shan Xi மாநிலத்தில் எரியாற்றல் தொழிலுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இம்மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் கமிட்டித் தலைவர் Li Xiao Dong செய்தியாளரிடம் பேட்டி அளிக்கையில், தற்போது, இம்மாநிலத்தின் எரியாற்றல் தொழிலில், குறிப்பிடத்தக்க அளவு உருவெடுத்துள்ளது. இனிமேல், எரியாற்றல் மற்றும் வேதியியல் தொழிற்துறைக்காக, 20 ஆயிரம் கோடி யுவானை இம்மாநிலம் முதலீடு செய்யும் என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"வட Shan Xi மாநிலத்தில், எரியாற்றல் மிகவும் செழிப்பானது. குறிப்பாக நிலக்கரி படிவு அதிகம். உள்ளூர் மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில், இப்பிரதேசத்தின் எரியாற்றல், மின்னாற்றல் மற்றும் வேதியியல் தொழில்துறையில் பயன்பட்டு, இதன் கூட்டு மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனையை நாங்கள் முன்வைத்துள்ளோம்." என்றார் அவர்.
மூலவளத்தின் பயனை Shan Xi மாநிலம் உயர்த்தும் வேளையில், பொருள் வளங்களையும் உயிரின வாழ்க்கை சூழலையும் பாதுகாப்பதில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். 1 2
|