• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-26 10:10:36    
ஆடிபாடுகின்ற சீன முதியோர்கள்

cri
விளையாட்டு நடவடிக்கை ஆயுள் நீட்டிப்புக்கு முக்கிய காரணம் என்ற கருத்து மக்களிடையில் பொதுவாக பரவியுள்ளது. சீனாவில் லட்சக்கணக்கான முதியோர்களின் வாழ்க்கை முறை எப்படி உள்ளது. ராஜாராம்... சகோதரி கலையரசி நான் சீனாவுக்கு வந்து எட்டு மாதங்களாகின்றன. தினமும் காலையில் 6 மணி முதல் 8 மணி வரை நடைபயிலப் போகிறேன். நடப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது அல்லவா?நான் நடைபயிலப் போகும் வழியில் பல இடங்களில் காலையின் ஓரங்களிலும் பூங்காக்களிலும் ஒரு காட்சி எனது பார்வையில் படுகின்றது. அதாவது இனிமையான இசை டேப்ரிகார்டரில் ஒலிக்க அந்த இசைக்கு ஏற்ப முதியோர்கள் ஆடுகின்றனர். அவர்கள் தாறுமாறாக ஆடுவதில்லை. தாள லயத்திற்கு ஏற்ப ஒழுங்கு வரிசையாக நின்று ஆடுகின்றனர். ஏதோ சினிமா பார்ப்பது போல இருக்கின்றது. இவ்வாறு ஆடுவதால் முதியவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடிகின்றது அப்படித்தானே.

கலையரசி...ஆமாம். முதியோர்கள் ஆடுவதால் அவர்களுடைய ஆயுளை நீட்டிக்க முடியும் என்று சீன சமூக வியல் அறிஞர் சியான் பா பின் கூறுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான சீன அரசாங்கம் முதியோரிடையை ஆடல் முறை பற்றி பிரச்சாரம் செய்யும் முயற்சி பாராட்ட தக்கது. இப்போது முதியோர் ஆடி பாடும் காட்சியை சீனாவின் சாலைகளில் அதிகளவில் பார்க்க முடியும்.

ராஜாராம்.... சில சமயங்களில் திரைப்படக் கனவுக் காட்சியில் தேவதைகள் மிதந்து வருவார்களே. அது போல மிகமிக மெதுவாக ஆடுகிறாகள். அப்போது கைகளில் விசிறி வைத்திருக்கிறார்கள். இதற்கு என்ன பொருள்?கொஞ்சம் சொல்லுங்களேன்.

கலையரசி....யாங்கு எனப்படும் நடனம் ஆடுவதற்கு சிலர் இருந்தால் போதும். ஆடலாம். அவர்கள் இசை ராகத்திற்கு ஏற்ப விசிறியைக் கையில் பிடித்தபடி ஆடினால் இன்ப உணர்வு உருவாகும். அப்போது முதியோரின் முகத்தில் சிரிப்பு காணப்படும். விசிறி மட்டுமல்ல பட்டுத் துணி பட்டுக் கயிறு பூ போன்றவற்றையும் கையில் பிடித்து வீசியபடி முதியோர்கள் ஆடுகின்றனர்.

1  2