• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-26 10:10:36    
ஆடிபாடுகின்ற சீன முதியோர்கள்

cri

ராஜாராம்.....காலை 5 மனிக்கு கண்விழித்து சன்னல் வழியே பெய்சிங் நெருக்களைப் பார்க்கும் போது சாலை ஓரத்தில் சில முதியோர்கள் வரிசையாக நின்று நடனம் ஆடுவது தெரிவிறது. சிலர் சண்டை போடுவது போல கால்களை நீட்டுகின்றனர். சிலர் வாள் வீசுகின்றனர். இவை எல்லாம் மிகமிக மெதுவாக ஸ்லோ மோஷனில் அதாவது திராப்படங்களில் கனவுக் காட்சிகளில் இநாநாயகன் கதாநாயவியைச் சுற்றி வெண்ணிற ஆடை அணிந்த தேவதைகள் இறங்கி வருவார்களே அது போன்ரு நடக்கின்றன. இது பற்றி தமிழ்ச்ச செல்வம் அவர்களிடம் கேட்டேன். தயிச்சி என்று சொன்னார். அகராதியியே ஷேடோ பாக்ஸிங் அதாவது நிழல் குத்து என்று போட்டிரிந்தது. இதைப் பற்றி விளக்க முடியுமா?

கலையரசி.....கண்டிப்பாக. நிழல் குத்து உடல் பயிற்சி சீன மருத்துவவியலில் இயற்கையில் உள்ள யிங் யாங் உயிர் ஆதாரம் பற்றி குறிப்பிடுகின்றது. சூரிய ஒளியை பின்பற்றி பயிற்சி செய்வதால் உடம்பில் உள்ள யின் ஓட்டம் வெளியேறுகிறது. உடம்பின் வலிமை அதிகரிக்கிறது.

எடுத்துக்காட்டாக பயிற்சியில் ஈடுபடும் முதியவர் குன் சியு ச்சன் பற்றி கூறலாம். அவருக்கு 65 வயதாகின்றது. பல ஆண்டுகளாக பணி புரிந்து தவிர குழந்தைகளை வளர்த்து குடும்பத்தை காப்பாற்றினார். ஓய்வு பெற்ற பின் வீட்டுக்கு திரும்பினார். குழந்தைகள் வளர்ந்து திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் கூடுதலான நேரத்தை எப்படி கழிப்பது எந்று தெரியாமல் திண்டாடினார். அப்போது ஆடுவதை அவர் தேர்வு செய்தார். உடல் பயிற்சி மூலம் அவரை சுற்றி வாழ்வோருடன் சாதாராண நாட்களில் கொண்ட தொடர்பை விட மேலும் கூடுதலாக பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தனிமை இனிமேல் அவருக்கு இல்லை என்றாகிவிட்டது.

ராஜாராம்.... இந்த உடல் பயிற்சி மூலம் ஒரு பக்கம் தனிமை உணர்வு நீங்குகின்றது. இன்னொரு பக்கம் முதியோர்களின் தெம்பு அதிகரிக்கின்றது. ஒரு நாளில் காலைப் பொழுதுதான் மிகவும் சிறப்பான நேரம் என்று சொல்வார்கள். காலை நேரத்தில் உடல் பயிற்சி செய்தால் அன்றைய நாள் முழுவதும் உடம்பு சுறுசுறுப்பாக இருக்கும் என்று லொல்கிறார்களே. சரிதானா?

கலையரசி......ஆமாம். தினமும் அதி காலையில் எழுந்திருந்து உடல் பயிற்சியில் ஈடுபட்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்பான உணர்ச்சியுடன் வேலையில் ஈடுபடலாம். காலையில் விளையாடுவதால் மனதில் ஊக்கம் பிறக்கின்றது. தனிமை நீங்குகின்றது. உண்ணும் உணவு செரிப்பதற்கும் விளையாட்டு துணை புரிகிறது. உடல் பயிற்சியில் ஈடுபடும் முதியோர் ஒவ்வொருவருடைய தோற்றத்தை பார்த்தால் அவர்களுடைய முகம் சிவப்பாக காணப்படுவதை நீங்கள் கவனிக்கலாம்.

ராஜாராம்..... சரிதான். இப்படி உடல் பயிற்சியில் ஈடுபடும் முதியவர்கள் கச்சிதமான உடலமைப்புடன் இருக்கிறார்கள். தொந்தி போடவில்லை. ஊவைக் கதை தொங்கவில்லை. உறுதியாக எட்டு எடுத்துவைத்து தரை அதிர நடந்து செல்கின்றனர். இன்னொ1ரு விஷயம் இந்த முதியவர்கள் பெரும்பாலும் வேயில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்கள் காலையில் உடல் பயிற்சி செய்வதோடு நின்று விடாமல் பகலில் காலைக்குச் சென்ரு போலிஸ் தரும் சீருடை அணிந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் சமூக சேவையிலும் ஈடுபடுகிறாராகள். பெய்சிங் சாலைகளில் விசில் ஊதி வாகனங்களையும் பாத சாலிகளையும் ஒழுங்குபடுத்துவது போலீஸ் அல்ல பொது மக்கள் அதுவும் பணி ஓய்வு பெற்ற முதியவர்கள். ஆகவே நேயர்களே எவ்வளவுதான் வேலை நெருக்கடி இருந்தாலும் தினமும் அரை மணி நேரமாவது உடல் பயிற்சிக்கு ஒதுக்க மறக்காதீர்கள். நமது உள்ளம் இறைவன் என்றால் அந்த இறைவ உறையும் ஆலயம் நமது உடம்பு அல்லவா?

கலையரசி....நேயர்களே முதியோர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் உயல் பயிற்சியில் கவனம் செலுத்துகின்றனர். நாமும் அவர்களை போல் இதில் கவனம் செலுத்த வேண்டும். நல்ல உடல் நிலை இருப்பது மநது இன்பமான வாழ்க்கைக்கு அடிப்படையாகும். அல்லவா.


1  2