• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-28 17:19:17    
யுன்னான் மாநிலத்தின் சுற்றுலா இடமான தாலி நகரம்

cri

தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தில் புகழ்பெற்ற சுற்றுலா இடமான தாலி நகரம் அமைந்துள்ளது. இந்த எழளில் மிக்க தாலி நகரின் இயற்கைக் காட்சி, வரலாற்றுச் சிறப்பிடம். தேசிய இனங்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவை மேன்மேலும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்த்துள்ளன.

தாலி நகரில் மிகப் பிரபல இயற்கைக் காட்சி, சான்சாங் மலை மற்றும் ஆல்ஹை கடலாகும். சான்சாங் மலையின் சிகரம் 4100 மீட்டருக்கும் மேலாகும். அதனை ஒட்டியமைந்துள்ள சில மலைகளின் சிகரம், கடல் மட்டத்திலிருந்து 3800 மீட்டர் உயரத்திற்கு மேல் அமைந்துள்ளது. சான்சாங் மலையின் அடிவாரத்தில் பரந்த ஆல்ஹை கடல் உள்ளது. அது, தெற்கிலிருந்து வடகே ஏறக்குறைய 42 கிலோமீட்டர் நீளமும் கிழக்கிலிருந்து மேற்கே 3 முதல் 9 கிலோமீட்டர் அகலமும் உடையது. சுற்றுலா படகில் ஏறி, ஆல்ஹை கடலில் எழில்மிக்க சான்சாங் மலை மற்றும் ஆல்ஹை கடலின் காட்சியைக் கண்டுகளிப்பது, கண்களுக்கு ஒரு நல்ல விருந்தாகும் என்று கூறலாம். தாலி நகரில் நாள்தோறும் அதிகமான சுற்றுலா படகுகள் ஆல்ஹை கடலில் பயணம் செய்கின்றன. பயணிகள், குறிப்பிட்ட சுற்றுலா நெறிகளுக்கிணங்க, கடலோரத்திலுள்ள காட்சித் தலங்களுக்கு அல்லது ஆல்ஹை கடலிலுள்ள சில சிறிய தீவுகளுக்குச் சென்று பார்வையிடலாம். அப்படகுகளின் தளத்தில் நின்ற வண்ணம், தெந்த கடல் நீரையும் கடலோரத்திலுள்ள ியற்கை காட்சியையும் கண்டுகளிப்பது பயணிகளுக்கு மிகவும் விருப்பம்.

குளிர்காலத்தில் தாலிக்குச் சென்றால், சான்சாங் மலையை மூடும் உறை பணியையும் கண்டுகளிக்கலாம். குளிர்காலத்தின் போதெல்லாம், சான்சாங் மலையின் உச்சியில் வெள்ளைவெளேர் என்ற உறை பணியும் நீல நிறுமுடைய ஆல்ஹை கடல் நீரும் அழகாந காட்சியளிக்கும். தவிர, சான்சாங் மலையில் புகழ்பெற்ற மலர்கள் பல வளற்கின்றன. இவற்றில் azalca மலர் குறிப்பிடத் தக்கது. azalca மலர் பூத்துக்குலுங்கும் போது, மலையெங்கும் நறுமணம் வீசும். இதனால், பயணிகள் அவ்விடத்தைவிட்டச் செல்ல மனமில்லை.

சுற்றுலா பேருந்தில் ஏறி, தாலி நகரிலுள்ள வரராற்றுச் சிறப்பிடமான சொன்சன் கோயிலின் 3 கோபுரங்களைப் பாப்வையிடலாம். இக்கோபுரங்கள், சான்சாங் மலைக்கும் ஆல்ஹை கடலுக்கும் இடைப்பட்ட இடத்தில் அமைந்துள்ளன. சீனாவில் அவை, புகழ் மிக்கவை. அவை ஒத்தவடிவங்கள் உடையவை. ஆனால், வேறுபட்ட காலங்களில் கட்டியமைக்கப்பட்டவை. இவற்றில் ஏறக்குறைய 70 மீட்டர் உயரமுடைய முக்கியக் கோபுரம், 9வது நூற்றாண்டில், சீனாவின் தான் அரச குள காலத்தில் கட்டப்பட்டது. சீனாவில், இதுவரையிலும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டுவரும் மிக உயர்ந்த கோபுரங்களில் ஒன்றாக இது திகழ்கின்றது. ஏனைய இரண்டு கோரபுரங்கள், முக்கிய கோபுரத்தின் மேற்கில் அதாவது சான்சாங் மலைக்கு அருகில் அமைந்துள்ளன. இவ்விரு சிறிய கோபுரங்களின் உயரம், 42.4 மீட்டராகும். அவை ஒவ்வொன்றுக்கும் முக்கிய கோபுரத்துக்குமிடையிலான இடைவெளி 70 மீட்டர் ஆகும்.

1  2