• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-28 17:19:17    
யுன்னான் மாநிலத்தின் சுற்றுலா இடமான தாலி நகரம்

cri

இம்மூன்று கோபுரங்கள் வேறுபட்ட காலங்களில் கட்டப்பட்ட போதிலும், அவற்றின் கட்டமைவு, மிகவும் சிறந்துவிளங்குகின்றது. அவை, கம்பீரமாக காணப்படுகின்றன. அதே வேளையில், சான்சாங் மலை மற்றும் ஆல்ஹை கடலின் அழகிய காட்சிகளுடன் சேர்ந்து, தனிச்சிறப்பு வாய்ந்த அவ்விடத்தின் இயற்கை காட்சி மேலும் பயணிகளைக் கவர்கின்றது.

கடந்த சில ஆண்டுகளில் தாலி நகரிலுள்ள பல்வேறு காட்சித் தலங்களுள் இம்மூன்று கோபுரங்களுக்கே வருகை தந்த உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் கூடுதலானது என்பது குறிப்பிடத் தக்கது.

புகழ்பெற்ற பண்டைய தாலி நகரம், 14வது நூற்றாண்டில் சீனாவின் யுவான் அரசகுல காலத்தில் கட்டியமைக்கப்பட்டது. இதுவரை அது 600 ஆண்டுகளுக்கும் மேலான வரராறுடையது. தாலியின் பழங்கால பகுதியில் பழமை வாய்ந்த காட்சித் தலங்கள் அதிகம். இது மட்டுமின்றி, தனிச்சிறப்பியல்பு வாய்ந்த ஊரகக் காட்சியும் உள்ளது.

தாலி நகரில், பயணிகள், சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றான பெய் இன மக்களின் தன்னிகரற்ற நடையுடை பாவனைகளைக் கண்டு இன்புறலாம். பெய் இன மக்கள், விரும்தோம்பல் மிக்கவர்கள். அவர்கள், தம் தேசிய இனத்தின் மதிப்பு மிக்க வரவேற்பு முறையான 3 வகை தேநீர் என்ற முறையில் விருந்தினர்களை வரவேற்பது வழக்கம்.

விருந்தினர்களுக்கு வழங்கப்படும் முதல் வகை நேநீர், சுற்று கசப்பானது. இரண்டாவது வகை தேநீர், இனிப்பானது. 3வது வகை தேநீர், பின் சுவையுடையது.. வாழ்க்கையில் முதலில் கசப்பும் பின்னர் இனிப்பும் ஏற்படும். இவற்றை நினைவு கூருவது பின் சுவை பார்ப்பது போன்றது என்பதை இந்த தேநீர் வகைகள் பொருட்படுகின்றன. தற்போது, சுற்றுலா துறையின் வளர்ச்சியுடன், பெய் இன மக்கள் அடிக்கடி சுற்றுலா படகஸில், பயணிகளுக்குக் தேநீர் வழங்குவர். இவ்வாறு பயணிகள், சான்சாங் மலை மற்றும் ஆல்ஹை கடலின் அழகான இயற்கை காட்சியையும் பெய் இன மக்களின் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த ஆடல்-பாடல்களையும் கண்டுகளிக்கும் அதே வேளையில், பெய் இன மக்களின் 3 வகை தேநீரையும் அருந்தி மகிழலாம்.


1  2