• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-29 18:20:34    
கஜக் இன ஆசிரியை குரிமுஹன்

cri

கஜக் இன துவக்கப்பள்ளி மாணவர்கள், வட மேற்கு சீனாவின் சிங்கியாங் விகுர் தன்னாட்சிப்பிரதேசத்தில் வாழ்கின்றனர். ஒதுக்குப்புற மலைப்பிரதேசத்தில் வசிப்பதினால், அவர்கள், தத்தமது பெற்றோருடன் மேய்ச்சலில் ஈடுபடுவர். ஆனால், கற்றுக்கொள்ளும் ஆர்வத்துக்கும், வெளிப்புறத்தின் மீதான அவர்களின் எதிர்பார்ப்புக்கும் இது தடையாகவில்லை. இவ்விருப்பத்தை நனவாக்குவதில் அவர்களுக்கு உதவிடும் குரிமுஹன், கஜக் இன ஆசிரியை ஆவார். அவள் காட்டும் தாயன்பு காரணமாக, இக்குழந்தைகள், மனநிமதியுடன் படிக்க முடிந்தது.

சிங்கியாங்கின் தலைநகரான உருமுச்சி நகரத்தின் தொலைத்தூரத்தில் மலைகள் சூழ்ந்துள்ளன. இவ்விடம், கஜக் இன மேய்ப்பர்கள் வசிக்கும் பிரதேசமாகும். குரிமுஹன் ஆசிரியை இருக்கும் துவக்கப் பள்ளிக்கூடம், மிகவும் ஒதுக்குப்புறத்தில் உள்ளது. இது, பெரிய மலையிலே அமைந்துள்ளது. ஏற்ற இறக்கமான வளைந்து செல்லும் மலைச் சாலை ஒன்றில் கார் மூலம் ஒரு மணிநேரத்துக்குப்பின் இப்பள்ளி சென்றடையலாம். பள்ளி அறைகள் மிகவும் எளிமையானவை. மாடியற்ற சாம்பல் நிற வீடுகள் வரிசையாக மலை அடிவாரத்தில் நிற்கின்றன. ஒரு சிறிய ஆறு இப்பள்ளியைச் சுற்றி வளைந்து வளைந்து செல்கின்றது. நான்கு பக்கங்களிலும் பாலைவனமே. கஜக் இன மேய்ப்பர்கள், கோடைக்காலத்தில் மேய்ச்சல் நேரத்தில் உருவாக்கிய கூடாரங்கள், அங்கும் இங்குமாக பள்ளியின் சுற்றுப்புறங்களில் கிடக்கின்றன.

குரிமுஹன் 1982ம் ஆண்டில் இடைநிலைப்பள்ளி படிப்பை முடித்துக் கொண்டு இங்கு வந்தார். இவ்வாண்டு 43 வயதான அவள், அப்போதைய மோசமான வசதிகள் மறக்கவே முடியாது என்கிறார்.

"பாடம் சொல்லிக் கொடுக்க, நான் முதன்முறையாக இங்கு வந்த போது, பள்ளியில் 5 வகுப்புகள் மட்டும் இருந்தன. இரண்டு பாட அறைகள் தவிர, ஆசிரியர்களுக்கு வசிப்பிடம் எதுவும் இல்லை. அப்போது நான் வீட்டிலிருந்து கொண்டு வந்த பொருட்களை வைத்துக் கொள்ளும் இடமில்லை. வசிப்பிடமும் இல்லை. எனது பொருட்களை வகுப்பறையின் மூலைமுடுக்குகளில் வைக்க வேண்டி ஏற்பட்டது" என்றார், அவள்.

1  2