• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-29 18:20:34    
கஜக் இன ஆசிரியை குரிமுஹன்

cri

மலைப்பிரதேசத்தில் வாழ்க்கை மிகவும் கடினமானது. கோடைக்காலத்தில், மேய்ப்பர்கள், சிறிய ஆற்றிலிருந்து அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான நீரை எடுத்துச் செல்ல வேண்டும். குளிர்காலத்தில், பனிக்கட்டியை உருக்கி அந்த நீரை பயன்படுத்த வேண்டி ஏற்பட்டது. இங்கு போக்குவரத்து வசதி இல்லை. வசந்த காலத்திலும் கோடைக்காலத்திலும் வேளாண்மைக்கு பயன்படும் வாகனங்கள் மூலம் வெளியே போகலாம். ஆனால், குளிர்காலத்தில் பனி மலைகளை மூடிமறைக்கும் நாட்களில், நடத்து தான். மலைப்பிரதேசத்திலிருந்து வெளியே போகலாம். இத்தகைய கடினமான சூழலில், குரிமுஹன் 23 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வந்துள்ளார். இதற்குக் காரணம் என்ன?

"அப்போது நான் இங்கு வந்த போது இளமையாக இருந்தேன். இங்குள்ள மோசமான சூழலைக் கண்டு வருத்தமடைந்தேன். ஆனால், விவசாயிகள் மற்றும் மேய்ப்பர்களின் குழந்தைகளுக்கு என்னை போன்ற ஆசிரியை தேவைப்படுகின்றார். எனவே நான் இங்கு தங்கியிருக்கின்றேன். குழந்தைகளுடன் தொடர்பு கொண்ட பின் அவர்கள் மீது ஆழ்ந்த அன்பு கொண்டுள்ளேன. இவ்வாறு தான், எனது வாழ்நாள் கல்வி பணியைத்துவக்கியுள்ளேன்" என்றார் குறிமுஹன்.

மலைப்பிரதேசத்திலுள்ள பள்ளியில் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் எதுவும் இல்லை. நவீன கல்வி சாதனங்களும் கிடையாது. உடல் பயிற்சி விளையாட்டு வசதிகளும் மிகவும் எளிதானவை. மாணவர்களின் படிப்புக்குப் பிந்திய வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில், குரிமுஹன் பாடம் சொல்லிக்கொடுப்பது தவிர, அடிக்கடி குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவர். அவர்களுக்கு கதை சொல்லுவார். மலையேறுதல், கால் பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களுக்கு அவர் ஏற்பாடு செய்வார். மேலும் ஒன்றுபட்டு மற்றவர்களுக்கு உதவிடுமாறு குரிமுஹன் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தார்.


1  2