சுமார் நூறு ஆண்டுகால வரலாறு உடைய Loreal குழுமம், தற்போது உலகளவில் மிகப் பெரிய ஒப்பனைப் பொருள் உற்பத்தி நிறுவனமாகும். 8 ஆண்டுகளுக்கு முன், அது சீன சந்தையில் நுழைந்தது. சீனாவில் நுழைந்து நீண்டகாலம் ஆகவில்லை என்றாலும், அதன் வளர்ச்சி மிகவும் விரைவாக இருக்கிறது. இப்போது, Loreal குழுமத்தின் சீன நிறுவனம், சீன சந்தையில் 3வது பெரிய ஒப்பனைப் பொருள் தயாரிப்பு வணிக நிறுவனமாக வளர்ந்துள்ளது. சீன சந்தையில் அது விற்பனை மூலம் பெற்ற வருமானம், Loreal குழுமத்தின் உலக சந்தையில் தொடர்ந்து 3 ஆண்டுகளில் முதலிடம் வகிக்கிறது.
இதர உலகளாவிய புகழ்பெற்ற ஒப்பனை பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, Loreal குழுமம் சீன சந்தையில் தாமதமாக நுழைந்தது. 1996ஆம் ஆண்டில், சீனாவில் ஒரு லட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் ஆலை நிறுவ, அது 5 கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்தது. ஓராண்டுக்குப் பின், ஷாங்காய் மாநகரில் அதன் சீன கிளை நிறுவனங்களின் தலைமையகம் நிறுவப்பட்டது. தொடக்கத்தில், சீன நகரங்களில் சுமார் 10 கோடி இளம் பெண்களை இலக்கு வாடிக்கையாளராக அது வைத்துக் கொண்டு, அவர்களின் நுகர்வு ஆற்றலுக்கிணங்க, வேறுபட்ட தயாரிப்பு சின்னங்களை வழங்கி, சீனாவில் உள்ள பேரங்காடிகளில் சிறப்பு பிரிவுகளாத் திறந்தது.
இத்தகைய சந்தை மதிப்பீடு மற்றும் விற்பனை மாதிரியினால், Loreal குழுமத்துக்கு சீன சந்தையில் விரைவில் வெற்றி கிடைத்தது. சீ Loreal குழுமத்தின் சீன நிறுவனத்தின் ஆளுனர் Paolo Gasparrini கூறியதாவது—
"எங்கள் சின்னங்கள் சீனாவில் சீராக வளர்ந்து வருகின்றன. அவற்றின் எதிர்கால வளர்ச்சி நன்றாக இருக்கிறது என்று நான் கருதுகின்றேன். எங்கள் குழுமத்தின் புகழ்பெற்ற சின்னங்கள் அனைத்தும் சீனாவில் நுழைந்து வளர்கின்றன. அவை சீன நுகர்வோரால் அறிந்து கொண்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன" என்றார் அவர்.
Paolo Gasparrini சொல்வதை போன்று, சில ஆண்டுகால வளர்ச்சி மூலம், Loreal குழுமத்தின் உற்பத்திப் பொருட்கள், தற்போது சீனாவின் 500க்கு அதிகமான நகரங்களில் விற்பனையாகின்றன. இக்குழுமத்தின் Lancome மற்றும் Maybelline சீன சந்தையில் வகிக்கும் பங்கு, தனது வகையிலான இதர தயாரிப்புப் பொருட்களைக் காட்டிலும், முதலிடம் இருக்கிறது.
1 2
|