• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-01 08:03:49    
சீனாவில் Loreal குழுமம்

cri

சீனாவில் உயர் நிலை ஒப்பனை பொருள் சந்தையில் உறுதியாக நின்ற பின், கூடுதலான நுகர்வோர் கொண்ட நடு நிலை மற்றும் தாழ்ந்த நிலை சந்தையில் Loreal குழுமம் கவனம் செலுத்துகிறது. சில உற்பத்தி பொருட்களின் விலையை குறைத்ததை தவிர, சீனாவின் Mini Nurse எனும் சின்னத்தையும் YUESA எனும் சின்னத்தையும் Loreal குழுமம் கொள் முதல் செய்தது. இந்த இரண்டு கொள் முதல்களால், சீன சந்தையில் அது வகிக்கும் பங்கு உயர்வதோடு, சீனாவில் உற்பத்தி செய்யும் அதன் திறனும் 3 மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.

பல வெற்றிகரமான நடவடிக்கைகளால், Loreal குழுமம் சீனாவில் விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2002ஆம் ஆண்டு முதல், சீனாவில் Loreal குழுமத்தின் விற்பனை வருமானம், ஆண்டுக்கு 50 விழுக்காடு என்ற வேகத்தில் அதிகரித்து வருகிறது. 2004ஆம் ஆண்டு, சீனாவில் அதன் விற்பனை வருமானம் 300 கோடி யுவானை நெருங்கியது. இது 2003ஆம் ஆண்டில் அதே காலத்தில் இருந்ததை விட 99 விழுக்காடு அதிகமாகும்.

Loreal குழுமத்தின் சீன நிறுவனத்தில் உள்ள 3000 பணியாளர்களில், 10க்கு அதிகமான பணியாளர்கள் மட்டுமே வெளிநாட்டவர். இந்நிறுவனத்தின் மேல்மட்ட நிலை நிர்வாகிகளில் சீனர் உள்ளனர்.

வளர்ச்சி வாய்ப்பை வழங்குவதால் தாம் Loreal குழுமத்தில் வேலை செய்கிறார் என்று இந்த நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலகத்தின் மேலாளர் சோ கென் லியாங் செய்தியாளரிடம் கூறினார். அவர் கூறியதாவது—

"இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நான் Loreal குழுமத்தில் பணி புரிகின்றேன். எதிர்பாராத வாய்ப்புகளை இது உங்களுக்கு வழங்கலாம். பல்வேறு பின்னணி உடையவர்களை அது வரவேற்கிறது. பின்னணி, record of education ஆகியவற்றுக்கு எதிராக, ஆர்வம், உள்ளார்ந்த திறன் ஆகியவற்றுடன் அது மக்களை மதிப்பிடுகிறது. ஓரளவு இடர்ப்பாட்டை ஏற்றுக் கொள்ள அது விரும்புகிறது. ஒரு துறையில் நீங்கள் சோதனை செய்ய வேண்டுமானால், அது உங்களுக்கு வாய்ப்பை வழங்கும். நிறுவன பண்பாட்டில் ஒரு முக்கிய தனிச்சிறப்பு இதுவாகும்" என்றார் அவர்.

தற்போது சீனாவின் ஒப்பனை பொருள் சந்தையின் அளவு, 500 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. மேலும், ஆண்டுதோறும், இந்த அளவு, சுமார் 20 விழுக்காடு என்ற வேகத்தில் அதிகரிக்கிறது. எதிர்காலத்தில் சீனாவின் ஒப்பனை பொருள் சந்தை ஜப்பானிய சந்தையை தாண்டி, ஆசியாவில் மிகப் பெரிய சந்தையாக மாறக் கூடும் என்று மதிப்பிடப்படுகிறது. மும்முரமான போட்டியில் முன்னேறிய இடத்தை நிலைநாட்ட, Loreal குழுமம் சீனாவின் ஷாங்காய் மாநகரில் 60 லட்டம் யுரொ முதலீடு செய்து, Loreal குழுமத்தின் உலக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தை நிறுவியுள்ளது.


1  2