• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-02 22:43:21    
புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சை

cri
அறிவியல் தொழில் நுட்பமும் மருத்துவ சிகிச்சைமுறைகளும் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் கடும் தீங்கு விளைவிக்கும் பல நோய்கள் அவ்வளவு பயங்கரமான நோய்களாக தெரியவில்லை. ஆனாலும் பல்வகைப் புற்று நோய்கள் இன்னும் எளிதில் குணப்படுத்த முடியாத நோய்களாகவே உள்ளன. எனவே புற்று நோய் இப்போது உலகில் மிகவும் கடுமையான நோய்களில் ஒன்றாகியுள்ளது. 2000ம் ஆண்டு உலகில் 62 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு மரணமடைந்தனர் என்று புள்ளிவிபரம் கூறுகின்றது.

இருப்பினும் இந்நோயைக் குணப்படுத்துவதில் மக்கள் செய்யாமல் திகைக்கவில்லை. புற்று நோயின் துவக்க நிலையிலேயே சிகிச்சை தருவது நல்லது. எனவே துவக்க நிலையிலேயே புற்று நோய்க்கு சிகிச்சை செய்ய முடியுமானால் சுமார் மூன்றில் ஒரு பகுதி புற்றுநோயாளிகள் குணமடைய முடியும் என்று உலக சகாதார அமைப்பு அறிவித்திருந்தது. இதற்கு நோய் அறிகுறிகளை முதலிலேயே கண்டறிய வேண்டும். இப்போது இது பற்றி பார்ப்போம் அபாயகரமான கட்டி என்பது புற்றுநோய்க்கு இன்னெரு பெயராகும். செல்களின் இயல்பற்ற பெருக்கத்தினாலும் மாற்றத்தினாலும் இது ஏற்படுகின்றது. புற்று நோயைச் சிகிச்சை செய்யும் போது முதலிலேயே கண்டறிந்து முன்னதாக நோய்க் கூறுகளை உறுதிப்படுத்தி துவக்க நிலையிலேயே சிகிச்சை செய்வது மிகவும் முக்கியமாகும். எடுத்துக்காட்டாக பெரும் குடல் புற்றுநோயாளிகள் துவக்கத்திலேயே பெற முடியுமானால் அவர்களில் 90 விழுக்காட்டினர் தொடர்ந்து 5 ஆண்டுகள் கூடுதலாக வாழ முடியும். இது பற்றி சீன மருத்துவவியல் அறிவியல் கழகத்தின் புற்றுநோய் மருத்துவ மனையின் மருத்துவர் திரு ஷ் யூவான் காய் கூறியதாவது "அறிவியல் தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்துடன் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ள வேளையில் அபாயகரமான கட்டிகளுக்கு சிகிச்சை முறைகளும் மருந்துகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றின் பயனும் குறிப்பிட்ட அளவில் உயர்ந்துள்ளது. ஆனால் துவக்கத்திலேயே சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு கிடைத்த பயன் தாமதமாக சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு கிடைத்ததை விட சிறப்பாக உள்ளது"என்றார் அவர்.

புற்றுநோய்கள் அதிகமான ஏற்படும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும். 2000ம் ஆண்டு புற்றுநோயால் பீடிக்கப்பட்டு மரணமடைந்தோரின் எண்ணிக்கை 15 லட்சமாகும். தற்போது சீனாவில் மரணமடைந்த 5 பேரில் ஒருவர் மட்டுமே புற்றுநோயினால் மரணமடைந்தவர். எனவே சீன அரசு புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிக்கும் பெரும் முக்கியத்துவம் அளித்து வருகின்றது. துவக்கத்திலேயே கண்டறிவது புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சையில் முக்கியமான வழிமுறையாக தற்போது சீனாவில் பரவலாக நடைமுறைக்கு வந்துள்ளது.

1  2