• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-02 22:43:21    
புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சை

cri

50 ஆண்டுகளுக்கு முன்பே சீனா இப்பணியை துவக்கிவிட்டது. "ஒரு சொட்டு ரத்தம் ஒரு சொட்டு சிறு நீர் மூலம் துவக்கத்திலேயே புற்றுநோயை கண்டறிவோம்"என்ற உணர்ச்சியூட்டும் முழக்கம் அப்போதே முன்வைக்கப்பட்டது. உண்மையில் இது எளிதான செயல் அல்ல. கணிசமான அளவு பரிசோதனை முரை பயனற்றவை என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது. ஆனால் சில குறிப்பிடத்தக்க விளைகள் ஏற்பட்டன. வட சீனாவின் ஹோ பெய் மாநிலத்தின் ச்சியென் மாவட்டம் உணவு குழாய் புற்று நோய் கூடுதலாக ஏற்படும் பிரதேசமாகும். 1973ம் ஆண்டு அங்கு புற்றுநோயின் ஒட்டுமொத்த தடுப்பு மற்றும் சிகிச்சை மையம் நிறுவப்பட்டது. இதன் மூலம் உணவு குழாய் புற்று நோய் ஏற்படும் விகிதமும் அதனால் ஏற்பட்ட மரண விகிதமும் பெரிதும் குறைக்கப்பட்டது. ஹோ பெய் மாநிலத்தின் புற்ரறுநோய் மருத்துவமனையின் தலைவர் வாங் ஸ் ஜெ கூறியதாவது "30 ஆண்டுகளாக தொடர்ச்சியான ஒழுங்கான கழலை தடுப்பு மற்றும் சிகிச்சை மூலம் இம்மாவட்டத்தில் உணவு குழாய் புற்று நோய் ஏற்படும் விகிதமும் அதனால் உண்டாகும் மரண விகிதமும் படிப்படியாக குறைந்து வந்துள்ளன. எடுத்துக் காட்டாக 1974ம் ஆண்டு ஒரு லட்சம் ஆண் நோயாளிகளில் சுமார் இரு நூறு பேர் இந்நோயால் பீடிக்கப்படிருந்தனர். 2002ம் ஆண்டு ஒரு லட்சம் நோயாளிகளில் 130க்கும் அதிகமானோர் இந்நோயால் பீடிக்கப்பட்டனர்"என்றார் அவர்.

புற்றுநோயை தடுக்கவும் பொது மக்களின் உடல் நலனைப் பாதுகாக்கவும் சீனாவில் புதிய புற்று நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறை வகுக்கப்பட்டுள்ளது. சீன சகாதார அமைச்சகத்தின் நோய் கட்டுப்பாட்டு ஆணையத்தின் அதிகாரி குங் லின் ச்சு அம்மையார் கூறியதாவது

"2003ம் ஆண்டு டிசம்பர் திங்கள் சுகாதார அமைச்சகம் சீன புற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் வளரவை வெலியிட்டுள்ளது. புற்றுநோயை துவக்கத்திலேயே கண்டறிவது உறுதிப்படுத்துவது சிகிச்சை செய்வது ஆகியவற்றை இது வலியுறுத்துகின்றது"என்றார் அவர்.

தவிர, சீனா குறிப்பிட்ட சில பிரதேசங்களைத் தேர்ந்தெடுத்து புற்று நோயை துவக்க்த்திலேய் கண்டறிவதற்கான முன் மாதிரி தளங்களை நிறுவியுள்ளது. குங் லின் ச்சு தொடர்ந்து கூறியவாது

"2004ம் ஆண்டு நாங்கள் ஹொ நான், ஹொ பெய், சான் சி ஆகிய மூன்று மாநிலங்களில் புற்று நோய் அதிகமாக ஏற்படும் மூன்று கிராமப்புறப் பிரதேசங்களையும் சென் சன் நகரின் ஒரு குடியிருப்பு பிரதேசத்தையும் தேர்ந்தெதடுத்து கருப்பை கழுத்து மற்றும் உணவு குழாய் புற்று நோய்களுக்கான முன் மாதிரி தளங்களை உருவாக்கியுள்ளோம்"என்றார் அவர்.

இந்த முன் மாதிரி தளங்களில் சீனாவின் தொடர்புடைய வாரியங்கள் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு கூடிய விரைவியல் நோயாளிகளை கண்டறிவார்கள். அத்துடன் புற்று நோய் தடுப்பு மற்றும் எதிர்ப்பு பற்றிய அறிவை பொது மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றார்கள்.

நேயர்கள் இதுவரை சீனாவில் புற்று நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றி கேட்டீர்கள். இத்துடன் சீன நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைவுறுகின்றது.


1  2