விண்வெளி வீராங்கனைகளைத் தெரிந்தெடுக்கும் பணி சீனாவில் 2006ஆம் ஆண்டு துவங்கும் என்று சீன விண்வெளி திட்டப்பணியின் துணை பொது ஆணையாளர் ஹு சி சியாங் கூறியுள்ளார்.
கடந்த ஜுலை திங்கள் 25ந் நாள் சீன நாளேட்டுக்குச் சிறப்பு பேட்டி அளித்த அவர், பெண் விமானிகளிடையே இருந்து மட்டுமல்ல பெண்கள் அனைவரிடையே இருந்தும் விண்வெளி வீராகனைகள் தெரிந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறினார். அடுத்த ஆண்டு 4 அல்லது 5 விண்கல வீரங்கனைகள் தெரிவு செய்யப்பட்டு, 2010ஆம் ஆண்டுக்குள் அவர்கள் விண்வெளியில் பயணம் செய்வார்கள் என்று ஹு சி சியாங் கூறினார்.
தற்போது, ஆள் ஏற்றிச்செல்லும் எமது ராக்கெட்டிலும் விண்கலங்களிலும் உயிர் பாதுகாப்பு மற்றும் சுற்று சூழல் கட்டுப்பாட்டு வசதிகள் உள்ளன. ஆகையால், பயிற்சி பெற்ற உடல் நலமுடையவர்கள் விண்வெளி வீரர்களாகச் செவ்வனே செயல்படலாம் என்று அவர் சொன்னார்.
பெண் விமானிகள் நல்ல உடல் நலத்துடன் இருப்பதும், அவர்களுக்கு சிறந்த வான் பயண அனுபவம் இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், விண்கலத்தில் நுட்ப அறிவு மிக்க பொறியியலாளர் சீனாவுக்கு தேவை. விண்வெளியில் அவர்கள் சோதனை செய்ய வேண்டும். ஆகையால், விமானிகளை மட்டுமல்ல வேறு துறைகளைச் சேர்ந்தவர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.
எதிர்காலத்தில், ஒரு விண்கலத்தில் தலைவர் விண்கலத்தை ஓட்டுவார். பொறியியலாளர் சோதனையில் ஈடுபடுவர். ஒவ்வொருக்கும் அவரவர் பணி இருக்கும் என்றார் அவர்.
1 2
|