அனைத்து சு ஜியாங் ஆற்று கழிமுக வட்டார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி பற்றிய 2வது கருத்தரங்கு, அண்மையில் சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள சி சுவான் மாநிலத்தின் செங் து நகரில் நடைபெற்றது. சீனாவில் மிகப் பெரிய பொருளாதார ஒத்துழைப்பு வட்டாரமான அனைத்து சு ஜியாங் ஆற்று கழிமுக வட்டாரத்தில் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்ட ஓராண்டில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
சீனாவின் பு ஜியன், ஜியாங் சி, ஹு நான், குவாங் துங், குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசம், ஹைய் நான், சி சுவான், குய் சோ, யுன் நான் ஆகிய 9 மாநிலங்களும் தன்னாட்சி பிரதேசமும் மற்றும் ஹாங்காங், மகௌ ஆகிய இரண்டு சிறப்பு நிர்வாக பிரதேசங்களும் இந்த வட்டாரத்தில் அடங்கும்.
கடந்த ஆண்டில், சு ஜியாங் ஆற்று கழிமுக வட்டாரத்தில் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கூட்டு வளர்ச்சி கான, இந்த 9 மாநிலங்களும் தன்னாட்சி பிரதேசமும், ஹாங்காங், மகௌ ஆகிய 2 சிறப்பு நிர்வாக பிரதேசங்களுடன் சேர்ந்து, முதலாவது சு ஜியாங் ஆற்று கழிமுக வட்டார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி கருத்தரங்கை நடத்தின. இந்த கருத்தரங்கில் ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்று உருவாக்கப்பட்டது. இது இந்த வட்டார ஒத்துழைப்பு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்து விட்டதை கோடிட்டுக் காட்டுகிறது.
ஓராண்டு ஆகிவிட்டது. இந்த வட்டார ஒத்துழைப்பின் நிலைமை எப்படி? இது குறித்து, 2வது சு ஜியாங் ஆற்று கழிமுக வட்டார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி கருத்தரங்கில் கலந்து கொண்ட குவாங் துங் மாநிலத்தின் தலைவர் ஹுவாங் ஹுவா ஹுவா செய்தியாளரிடம் கூறியதாவது—
"கடந்த ஓராண்டில், இந்த வட்டாரத்தில் உள்ள பல்வேறு அரசாங்கங்கள் மற்றும் துறைகளின் முயற்சி மூலம், சு ஜியாங் ஆற்று கழிமுக வட்டாரத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்பு முன்னேறி, பெரும் பயன் ஏற்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களுக்காக ஒத்துழைப்பு மேடையை உருவாக்கி, ஒரு முறைமையை நிறுவியுள்ளோம். ஒத்துழைப்பு தொடர்ந்து விரிவாகவும் ஆழமாகவும் வளர்ந்து வருகிறது. சில முக்கிய துறைகளிலான ஒத்துழைப்பு சீராக வளர்ந்து வருகின்றது. எடுத்துக்காட்டாக, போக்குவரத்து ஒத்துழைப்பு, எரியாற்றல் ஒத்துழைப்பு. மேலும், நியாயமான வெளிப்படையான சந்தை சூழ்நிலை படிப்படியாக உருவாகி வருகிறது" என்றார் அவர்.
1 2
|