• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-08 15:40:00    
சு ஜியாங் ஆற்று கழிமுக வட்டார ஒத்துழைப்பு

cri

குவாங் துங், ஹாங்காங், மகௌ ஆகிய வளர்ச்சி அடைந்த பிரதேசங்கள் வளர்ச்சிப் போக்கில் சந்தித்த இயற்கை வள மற்றும் மனித வள பற்றாக்குறை, வளர்ச்சி வாய்ப்பு குறைவு ஆகிய பிரச்சினைகள், இந்த வட்டார ஒத்துழைப்பினால் பெருமளவில் தீர்க்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் அவ்வளவாக வளர்ச்சி அடையாத பகுதிகளைப் பொறுத்தவரை, குறுகிய நேரத்தில் வளர்ச்சிக்கு வேண்டிய பணத்தையும் முன்னேறிய தொழில் நுட்பங்களையும் சாதனங்களையும் அவை பெறுவதற்கும், அவற்றின் மூலவள மேம்பாட்டை பொருளாதார மேம்பாடாக மாற்றி, அவற்றுக்கும் வளர்ச்சி அடைந்த பிரதேசங்களுக்கும் இடையே இடைவெளியை குறைப்பதற்கும் இந்த வட்டார ஒத்துழைப்பு துணை புரியும்.

இந்த கருத்தரங்கு நடைபெறுவதோடு, சு ஜியாங் ஆற்று கழிமுக வட்டாரத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, 4400க்கு அதிகமான ஒத்துழைப்பு திட்டப்பணிகள் உருவாக்கப்பட்டன. இவற்றுக்கான முதலீட்டு தொகை 45 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. இது கடந்த பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தையில் இருந்ததை விட 15 ஆயிரம் கோடி யுவான் அதிகம்.

சு ஜியாங் ஆற்று கழிமுக வட்டார ஒத்துழைப்பின் முக்கிய உறுப்புகள் என்ற முறையில், ஹாங்காங்கும் மகௌவும், இந்த வட்டாரம் முதலீட்டை பெறும் முக்கிய இடங்களாகும். இன்று வரை, இந்த வட்டாரத்திலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் தன்னாட்சி பிரதேசத்திலும் ஹாங்காங் மட்டுமே 15 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்த்துள்ளது. சு ஜியாங் ஆற்று கழிமுக வட்டார ஒத்துழைப்பில் ஹாங்காங் ஆக்கப்பூர்வாக பங்காற்றும் என்று ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசச்சின் நிர்வாக அதிகாரி டொனால்ட் செங் இந்த கருத்தரங்கில் கூறினார்.

ஹாங்காங்கை விட வித்தியாசமாக உள்ள மகௌ, இந்த வட்டார சுற்றுலா சந்தையின் உள்ளார்ந்த ஆற்றலால் ஈர்க்கப்படுகிறது. இந்த வட்டாரத்தின் சுற்றுலா சந்தையை வளர்ப்பதற்கு அது முக்கியத்துவம் தருகிறது.

இந்த கருத்தரங்கில், வட்டார ஒத்துழைப்பு அமைப்பு முறையை முழுமைப்படுத்துவது, திறந்து விடப்பட்ட இசைவான சந்தை முறைமையை உருவாக்குவது, பொருளாதரமும் சமூகமும் இசைவாக வளர்வது ஆகியன விரிவான முறையிலும் ஆழ்ந்த முறையிலும் விவாதிக்கப்பட்டுள்ளன.


1  2