 சீனாவின் லியௌநின் மாலிலத்தின் எழில் மிக்க கடலோரத்தில் தாலியன் நகர் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்நகரின் மென் பொருள் தொழில் நிறுவிறுப்பாக வளர்ச்சி கண்டு வருகின்றது. இது சீனாவின் முக்கியமான மென் பொருள் உற்பத்தி தளங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. உள்நாட்டுத் தொழில் நுட்பத்துடன் மென் பொருள் உற்பத்தி செய்வது இத்தொழிலின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான திறவுகோலாகும். ஆகவே தாலியன் நகரின் மென் பொருள் தொழில் நிறுவனங்கள் முன்முயற்சியுடன் புதுமையை உருவாக்கும் ஆற்றலை உயர்த்துவதற்கு சிறப்பாக முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இப்போது இந்நிகரிலுள்ள மென் பொருள் மண்டலத்துக்கு சென்று பார்ப்போம்.
மென் பொருள் தொழில் ஒரு புதுவகையான தொழிலாகும். கடந்த சில ஆண்டுகளாக அது உலகில் விரைவான வளர்ச்சி மோக்கை நிலைநாட்டி வருகின்றது. அத்துடன் இரும்பு பொருட்களுக்குப் பதிலாக நவீன தகவல் தொழிலின் ஆத்மாவாகவும் அடிப்படையாகவும் மாறி அது நவீன உயர் அறிவியல் தொழில் நுட்ப போட்டியின் மையமாகவும் திகழ்கின்றது. புள்ளிவிபரங்களின் படி 2004ம் ஆண்டு உலக மென் பொருள் தொழிலின் விற்பனை அளவு 88 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இது 2003ம் ஆண்டில் இருந்ததை விட 11 விழுக்காடு அதிகமாகும். உலக மென் பொருள் தொழிலில் பின்தங்கியுள்ள வளரும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும். 2004ம் ஆண்டு சீனாவின் மென் பொருள் தொழில் உலகில் 3 விழுக்காடு மட்டுமே வகித்தது.

தாலியன் மென் பொருள் மண்டலம் இந்நகரின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இப்போது இங்கு 250 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இம்மண்டம் நிறுவப்பட்ட கடந்த 7 ஆண்டுகளில் அதன் விற்பனை அளவு அண்டுக்கு 30 விழுக்காடு என்ற வேகத்துடன் அதிகரித்துள்ளது. 2004ம் ஆண்டு அதன் விற்பனை அளவு 300 கோடி யுவானை எட்டியுள்ளது. முன்முயற்சியுடன் புதுமையை உருவாக்கும் ஆற்றலை இடைவிடாமல் உயர்த்துவது என்பது இம்மண்டலத்தின் விரைவான வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்கு முக்கிய காரணமாகும்.
1 2
|