• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-09 08:44:54    
தாலியன் நகரின் மென் பொருள் தொழில் நிறுவனங்கள்

cri

புதுமை ஆற்றலை உயர்த்தும் போக்கில் முதன் முதலில் திறமையாளர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதற்காக 2001ம் ஆண்டு தாலியன் மென் பொருள் மண்டலம் தொடர்புடைய தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைத்து இம்மண்டலத்தில் சீனாவின் மிக பெரிய மென் பொருள் கல்வி நிலையமான துங் ழான் தகவல் தொழில் நுட்ப கல்லூரியை நிறுவியுள்ளது. தற்போது இக்கல்லூரியில் 9 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர். டிப்ளோமா, இளங்கலைப்பட்டம், முதுகலைப்பட்டம், டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல கல்வி தகுதிகளைத் தரக் கூடிய உயர் கல்வி நிலையமாக மாறியுள்ளது. பிறகு இம்மண்டலத்தில் மூன்று நென் பொருள் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. தவிர, தாலியந் நகராட்சி அரசாங்கத்தின் ஆதரவுடன் தாலியன் நகரில் உள்ள 22 உயர் கல்வி நிலையங்களிலும் மென் பொருள் வகை துறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவை மென் பொருள் மண்டலத்திற்கு பல்வகை திறமைசாலிகளை அனுப்பிக் கொண்டே இருக்கின்றன. தாலியன் நகரின் தகவல் தொழில் ஆணையத்தின் தலைவர் லிவான் சின் வெய் எமது செய்தியாளரிடம் கூறியதாவுது,

"தாலியனைப் பொறுத்த வரை நாங்கள் ஒப்பீட்டளவில் முழுமையான திறமைசாலி கல்வி அமைப்பை உருவாக்கியுள்ளோம். இருந்தாலும் அதை மட்டும் சார்ந்திருந்தால் போதாது. எனவே நாங்கள் மேலும் தகவல் தொழில் நுட்ப நிபுணர்களை கொண்டுவர வேண்டும்"என்றார் அவர்.

தற்போது லாதியன் மென் பொருள் மண்டலத்தில் 12 ஆயிரம் மென் பொருள் பொறியாளர்கள் உள்ளனர். இவர்களில் பலர் வெளிநாடுகளில் பணி புரிந்தவர்கள். உள்ளூர் திறமைசாலிகளும் வெளியூர் திறமைசாலிகளும் தொழில் நிறுவனங்களின் புதுமை உருவாக்குவதற்கு உறுதியான ஆதரவளித்துள்ளனர். இம்மண்டலத்திலுள்ள காங் ஜி எண்ணஇயல் தொழில் நுட்ப பங்கு முதலீட்டு நிறுவனத்தின் தலைமை மேலாளர் சூ ச்சு சியன் கூறியதாவது,

"எங்கள் நிறுவனம் சொந்தமான நுடபத்துடன் மென் பொருட்களை வளர்ப்பதை ஆதாரமாகக் கொள்கின்றது.கணிணியின் உருவப் படங்களை ஆராய்வது என் ஆயும் நோக்கமாகும். இதில் எனக்கு 10 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் உண்டு. ஆகவே கோட்பாட்டு ஆய்வு முறைகள் பலவற்றை நான் சேகரித்து வைத்துதள்ளேன். எனது இரண்டு ஒத்துழைப்பாளர்களும் இத்துறையில் தேர்ச்சிப் பெற்றவர்கள். நாங்கள் பல்லாண்டுகளாக சேகரித்து வைத்த பொருட்களை ஆக்கப் பொருட்களாக தராயிக்கும் நோக்கத்துடன் இந்நிறுவனத்தை நிறுவினோம். தாலியன் நகரின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அடிப்படையும் திறமைசாலிகளும் வலுவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு தான் இங்கு வந்திருக்கிறோம்"என்றார் அவர்.

தற்போது இந்நிறுவனம் சொந்தமான தொழில் நுட்ப்த்தைக் கொண்ட மென் பொருட்களை தராரித்து சீனாவில் மட்டுமல்ல் அமெரிக்காவிலும் நன்கு விற்பனை செய்கின்றது. தாலியன் நகர் மென் பொருள் மண்டலத்தின் பொறுப்பானர் செந் சு யூ கூறியதாவது,

"எங்கள் மண்டலத்தில் சில நிறுவனங்கள் முன்பு வெளிநாட்டு வணிகர்களுக்காக பயன்பட்டு வந்து. ஆனால் எங்கள் தொழில் நுட்ப மர்றும் நிர்வாக பணியாளர்கள் இந்த தயாரிப்பு தொழில் நுட்பத்தையும் சில விதிகளையும் தெரிந்து கொண்ட பின் அறிவு சார் சொத்துரிமையைப் பாதுகாக்கும் முன்னிபந்தையில் இத்தகைய தொழுல் நுட்பத்தை படிப்படியாக உயர்த்தி சில மையமான சொந்த தொழில் நுட்பமும் வணிக சின்னம் உடைய ஆக்கப் பொருட்களை உருவாக்கியுள்ளோம்"என்றார் அவர்.


1  2