• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-10 11:49:06    
சீனாவில் குடும்ப கல்வி

cri

சீனாவில், குழந்தைகளை வளர்ப்பத்தில் குடும்ப கல்வியின் பங்கு மிகவும் முக்கியமானது. கடந்த சில ஆண்டுகளாக சீனாவிலுள்ள பெற்றோர்கள் தங்களது குடும்பக் கல்வி மனப்போக்கை மாற்றிக்கொண்டு, அறிவியல் முறைப்படி பிள்ளைகளை வளர்க்கின்றனர். மகளிர் மற்றும் குழந்தை நல அமைப்புகளும் பல இலட்சம் பெற்றோர் பள்ளிகளும் அவர்களுக்கு வழிகாட்டுகின்றன. சீரான குடும்பச் சூழலில் குழந்தைகளை ஒழுங்காகவும், மகிழ்ச்சியாகவும் வளர்ப்பது இதன் நோக்கமாகும்.

நீங்கள் கேட்டது, பெய்ஜிங் ஹாய் தியேன் பிரதேசத்தில் வாழ்கின்ற 6வது வகுப்பு மாணவி சூ யீ பாடிய பாடல். உடலும் மனதும் சீராக வளர்ச்சி பெறும் ஒரு மாணவியாக ஆசிரியர்கள் அவளை மதிப்பிடுகின்றனர். வகுப்பில் கல்வியில் அவள் முதன்மையானவள் அல்ல. ஆனாலும், அவள் திறந்த மனத்துடன் பிறருக்கு உதவி செய்ய விரும்புகின்றாள். தன்னம்பிக்கை மிகுந்தவள். ஆசிரியர்களும் சக மாணவர்களும் அவளை விரும்புகின்றனர். வாழ்க்கையில் குழந்தைப் பருவத்திலேயே அவளுடன் பேசுவதில் தாம் கவனம் செலுத்தியதே இதற்கு முக்கிய காரணம் என்று அவளுடைய தாய் மா குய் லிங் அம்மையார் கருதுகின்றார்.

பெற்றோரான நாங்களும் எங்கள் மகளும் ஒருவருக்கு ஒருவர் மதிப்பு அளிக்கின்றோம். ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டுகின்றோம். அவள் ஒரு குழந்தை என்பதால் மட்டும் அவளுக்கு மதிப்பளிக்கவில்லை. நாங்கள் பெற்றோர் என்பதால் கட்டளை பிறப்பிக்கவில்லை. நாங்களும் குழந்தையும் நண்பர்களாக பழகுகின்றோம் என்றார் அவர்.

நண்பர்களாகப் பழகுவதினால், மா குய் லிங் தம்பதி தங்களது மகளுடன் தொடர்பு கொண்டு பேசுவது எளிதாக உள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத்தை குடும்பத்தின்ர் அனைவரும் சேர்ந்து கண்டுகளிக்கின்றனர். காலா OK அறைக்குப் போய் பாட்டு பாடுகின்றனர். தமக்கு விருப்பமான கட்டுரைகளை பரஸ்பர எடுத்து கூறுகின்றனர். இவை எல்லாம் சாதாரண குடும்ப விஷயங்களாகும். இருந்த போதிலும் இவை அன்பைக் காட்டுகின்றன. மகளின் பண்புநலன் நன்றாக வளர்ப்பதில் இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று மா குய் லீங் அம்மையார் கருதுகின்றார்.

சிறு வயதிலேயே பெற்றோர்கள் தனது கருத்துக்கு மதிப்பு அளித்ததாகவும், வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி தரும் சூழ் நிலை நிலவுகின்றது என்றும் சூ யீ கூறினார்.

எனது தாய்தந்தையுடன் உறவு மிகவும் சீராக இருக்கின்றது. குடும்ப விஷயங்கள் பற்றி அவர்கள் என்னுடன் கலந்தாலோசிக்கின்றனர். எனது கருத்தினை அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர். எனக்கு எந்த கஷ்டம் இருந்தாலும் அவர்களிடம் கூறுகின்றேன். பெற்றோர்களுடன் நண்பர்களாக பழகுகின்றேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் அவர்.

1  2