• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-10 11:49:06    
சீனாவில் குடும்ப கல்வி

cri

தற்போது, மேலும் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகளுடனான கருத்து பரிமாற்றத்தில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், இது எளிதானதல்ல. ஏனென்றால், குழந்தைகள் பெற்றோரின் கட்டளைக்கு கண்டிப்பாகப் பணிய வேண்டும் என்பது நீண்டகாலமாக, சீனர்களின் குடும்ப கல்வி கருத்தாகும். குழந்தைகளின் வளர்ச்சியில் அறிவுக் கல்வி முதலிடம் வகிக்கின்றது என்று அவர்கள் கருதுகின்றனர். ஆகையால், குழந்தைகளுடன் பேசிப் பழகுவதை அலட்சியம் செய்திருக்கின்றனர். படிப்படியாக, சொந்த வளர்ச்சியின் அனுபவத்திலிருந்து பல பெற்றோர்கள் பாடத்தைக் கற்றுக்கொண்டு, கட்டளை இடுவது சிறந்த கல்வி முறையல்ல என்பதை புரிந்து கொண்டனர். குழந்தைகளுக்கு சரிசமமாகப் பேசக் கூடிய வாய்ப்பினையும் உரிய அளவிலான சுதந்திரத்தையும் வழங்கினால் தான், குழந்தைகளின் சீரான பண்பு உருவாக்கும் என்று பெற்றோர்கள் அறிந்து கொண்டனர்.

குழந்தைகளுடன் பேசிப்பழகுவதில், பெற்றோர்களுக்கு புதிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குழந்தைகளின் வேறுபட்ட வயதில் வேறுபட்ட பிரச்சினைகள் தோன்றுகின்றன. பெற்றோர்கள் இவற்றை சீராக சமாளிக்காவிட்டால், குழந்தைகளுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படக் கூடும். அதேவேளையில், பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறையைக் கண்டறிய, பல சீன பெற்றோர்கள் பெற்றோருக்கான பள்ளிக்குச் செல்கின்றனர். தற்போது, சீனாவில் இத்தகைய சுமார் 3 இலட்சம் பள்ளிகள் இருக்கின்றன. தவிர, பல குடியிருப்பு பிரதேசங்களில் பள்ளிகள் அல்லது கல்வி நிபுணர்கள் ஏற்பாடு செய்த பெற்றோர்களுக்கான சேவை மையங்கள் இருக்கின்றன.

மேற்கு சீனாவின் சான் சி மாநிலத்தில் சி ஆன் இடைநிலை பள்ளி நடத்தும் பெற்றோர் பள்ளி சீனாவில் மிகவும் புகழ் பெற்றது. வேறுபட்ட வயதிலான குழந்தைகளின் பெற்றோருக்கு வேறுபட்ட பாடத்தை ஏற்பாடு செய்து, பெற்றோரின் வரவேற்பை பெற்றுள்ளது என்று பெற்றோர் கல்விக்குப் பொறுப்பான இப்பள்ளியின் துணை தலைவர் வாங் லான் சுன் அம்மையார் கூறினார்.

பள்ளியில், குறிப்பிட்ட வயதில் தனது குழந்தைகளுக்கு எந்த பிரச்சினை ஏற்படுகின்றது என்பதை பெற்றோர்கள் அறிந்து கொண்டு முன்கூட்டியே தயார் செய்ய முடிகின்றது. இந்த பிரச்சினைகள் குறித்து, பெற்றோர் பள்ளி அவர்களுக்கு சில தீர்வு முறைகளை வழங்குகின்றது என்றார் அவர்.

தற்போது, இந்த பள்ளியில் சுமார் 3000 பெற்றோர்கள் மாணவர்களாகச் சேர்ந்துள்ளனர்.

குழந்தைகளின் சரியான உழைப்பு, மதிப்பு, வாழ்க்கை ஆகிய கண்ணோட்டங்களை வளர்ப்பதிலும் பெற்றோர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

ஹெர் நான் மாநிலத்தின் சான் சியு எனும் இடத்தைச் சேர்ந்த சாங் சௌ குன் என்பவர் ஒரு விவசாயி. பாடம் படித்து முடித்த பின், மகனுக்கு சில குடும்ப வேலைகளை கொடுப்பதாக அவர் கூறினார். இப்படி செய்தால் தான், பெற்றோரிடம் அன்பு காட்டுவது, உழைப்புப் பண்பை அறிந்து கொள்வது ஆகியவற்றை மகன் கற்றுக்கொள்ளலாம். இது மட்டுமல்ல அவருடைய உழைப்பு வழக்கத்தை உருவாக்கலாம்.

குழந்தைகளின் முதலாவது வளர்ப்பு சூழ்நிலையில் கவனம் செலுத்தி, குழந்தைகள் சீரான குடும்ப கல்வி பெறுவது பெற்றோர் ஒவ்வொருவரின் கவனத்தை மட்டுமல்ல சீனாவில் முழு சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வயது வராத குழந்தைகளின் குடும்ப கல்வி பிரச்சினையில் கவனம் செலுத்துவது பற்றி சீன அரசு அண்மையில் ஆவணம் ஒன்றை வெளியிட்டது. சமூகம் முழுவதிலும் சீரான குடும்ப கல்வி சூழ்நிலையை உருவாக்க பல்வேறு மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

சீன தேசிய மகளிர் சம்மேளனத்தின் குழந்தை நலப் பணி பிரிவின் தலைவர் ச்சியாங் யோ யர் அம்மையார் கூறியதாவது,

குடும்ப கல்வி பணி கூட்டத்தை சிறப்பாக நடத்தினோம். இப்பணியை மேம்படுத்தும் சில வழிகாட்டல் ஆவணத்தை வகுத்துள்ளோம். அதேவேளையில், சில பாட நூல்களை படிப்பித்து நாடளவில் பரவல் செய்கின்றோம். அறிவியல் கல்வி கருத்து, அறிவு, வழிமுறை ஆகியவற்றை பெற்றோர்களுக்கு கற்பிக்கின்றோம் என்றார் அவர்.


1  2