 ஒரு பழைய பைக்கை கழற்றி மாட்டி ஒரு கலப்பையாக மாற்றினார். அதைக் கொண்டு விதையும் விதைக்கலாம். அது மட்டுமா?அதில் 4 விவசாயத் தொழிலாளர்களும் ஏறிச் செல்லாம். "தேவைதான் கண்டுபிடிப்புக்களின் தாய்"என்ற பழமொழி நூற்றுக்கு நூறு உண்மையாகி விட்டது பாருங்கள்.
இவ்வளவு அற்புதமான படைப்புக்களை உருவாக்கியதற்காக வூ யு லூவுக்கு கிடைத்த ஒரு பரிசு அழகிய மனைவி.
"இவர் ஒரு சோம்பேறி என்றும் வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றுகிறவர் என்றும் கேள்விப்பட்டேன்"என்று தங்களுடைய முதல்சந்திப்பை மலரும் நினைவுகளாய் விவரிக்கிறார் வூ யு லூவின் மனைவி துங் சு யியென்"நான் முதலில் இவரைச் சந்தித்த போது அளவாகப் பேசினார். சளசள என்று தேனொழுகப் பேசவில்லை"என்று குறைப்பட்டுக் கொண்டார். ஆனாலும் வூ யு லூவை திருமண் செய்து கொள்ள சம்மதித்தார். இதற்குக் காரணம் இவர் நிகழ்த்திய ஒரு கண்டுபிடிப்பு.
ஒரு முறை கொளுத்தும் கோடை வெய்யிலில் காதலி துங், ஒரு தொழிற்சாலையில் பூ வேலைத் தையல் போட்டுக் கொண்டிருந்த போது வியர்த்துக் கொட்டியது. அருகில் இருந்த காதலன் வூ யு லூ தமது வழக்கப் படி எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தார். ஆனால் அவருடைய கை மட்டும் ஒரு பூனைவால் விசிறியை கொண்டு காதலிக்கு விசிறிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு எண்ணம் உதித்தது. "நான் இல்லாத நேரத்திலும் எனது காதலிக்கு விசிறிவிடக் கூடிய ஒரு கருவி இருக்குமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்?"என்று நினைத்தார். வீட்டுக்குத் திரும்பிய வூ ஒரு பெஞ்ச்சை தூக்கி நிறுத்தி அதன் மீது ஒரு மின்சார மோட்டாரை வைத்தார். பெஞ்ச்சுக்கு கீழ்ப் பகுதியில் ஒரு சுவிட்ச் வைத்தார். பூனைவால் விசிறியை மாட்டினார். இரண்டு நாட்கள் இதே வேலையாக இருந்து மேம்படுத்திய பிறகு அந்த நிற்கும் நிலையில் உள்ள மின்சார விசிறியை காதலி துங் வேலை செய்யும் தொழிற்சாலைக்கு அனுப்பினார். அந்த மின் விசிறி நன்றாக இயங்கியது. அதைப் பார்க்க துங்கின் தோழிகள் திரண்டுவிட்டனர். அப்போதுதான் சரி இவர் தான் நம்ம ஆள் என்று தீர்மானித்தேன் என்கிறார் துங்.
1 2
|