எந்திர மனிதர்களை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் கடந்த ஆறாண்டுகளாக வூ யு லூ மனதில் வேகம் பெற்றது. இவர் முதன் முதலில் உருவாக்கிய எந்திர மனிதனால் பாதங்களை நகர்த்தத்தான் முடிந்தது. கால்களைத் தூக்கி அடியெடுத்து வைக்க முடியவில்லை. "என்னிடம் பணமோ படிப்போ இல்லை. புத்தகம் படிக்க முடிய வில்லை. கற்றுக் கொடுக்க ஆசிரியரும் இல்லை. என்னிடம் இருந்தது எல்லாம் கற்பனையும் உள்ளணர்வும் தான்"என்று வூ யு லூ சொன்னார்.
வூ உருவாக்கிய இரண்டாவது எந்திர மனிதன் சுற்றிச் சுற்றி நடந்தான் மூன்றாவது எந்திர மனிதன் சுவர் மீது ஏறினான். மெல்ல மெல்ல தனது எந்திர மனிதர்களின் திறன்களை வூ யு லூ வளர்த்துவிட்டார். ஐந்தாவதாக உருவாக்கிய எந்திர மனிதன் தான் இவரைப் பெருமைப்பட வைத்தான். அவனால் சுற்றிலும் நடக்க முடியும். தேனீர் ஊற்றித் தரமுடியும். 'நி ஹாவ் என்று வணக்கம் கூறி வரவேற்க முடியும். விருந்தினர்களுக்கு பூச்செண்டு கொடுக்க முடியும். மெழுகுவர்த்தியையும் சிகரட்டையும் பற்றவைக்க முடியும். வீட்டுக்கு வேண்டிய சாமான்களை சுமந்துவர முடியும். இதன் பெயர் வூ லோ வூ. இதனுடைய திறமைகளை கண்டு அசந்து போன படைப்பாளர் பெயரை சூபர் வூ லோ வூ என்று மாற்றி 2003ம் ஆண்டில் நடந்த பெய்ச்சிங் அறிவியல் தொழில் நுட்பப் பொருட்காட்சியில் காட்சிக்கு வைத்தார். அப்போது போட்டிக்கு வந்தவர்களைப் போல இவரால் கண்டுபிடிப்புக்குத் தேவையான உயர் தொழில் நுட்ப பாகங்களைக் கடையில் விலை கொடுத்து வாங்க முடிய வில்லை. காயலான் கடையில் வாங்கிய அல்லது குப்பையில் இருந்து எடுத்த பொருட்களைப் பயன்படுத்தி தனது எந்திர மனிதர்களை உருவாக்கினார்.
குப்பையில் தூக்கி எறியப்பட்ட பேட்டரிகளை எடுத்து வந்து அவற்றுக்கு திரும்பவும் மின்னூட்டம் செய்து தனது எந்திர மனிதர்களில் பொருத்தினார். ஒரு முறை குப்பைத் தொட்டியில் இவருக்கு இரண்டு மின்சார வெடிப்புக் கருவிகள் கிடைத்தன. அவை பேட்டரி போலவே இருந்தன. அவற்றின் மீது ஏதோ ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதை வாசித்துப் பிருந்து கொள்ள முடியாமல் அந்த மின்சார வெடிப்புக் கருவிகளை டெட்டோனேட்டர்களை பேட்டரி என்று நினைத்து மின்னூட்டம் செய்யத் தொடங்கினார். உடனே குண்டு வெடித்து இவருடைய இடது கையும் மார்பும் எரிந்து போயின. பல வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது. இந்னொரு தடவை பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது வீடு தீப் பற்றி எரிந்து விட்டது. பிறகு சகோதர சகோதலிகளின் உதவியுடன் வீட்டைத் திரும்பக் கட்டினார். இன்றைக்கு அந்தக் கடனைக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
பலர் இவரிடம் வந்து தங்களது தொழில் கூட்டாளியாகச் சேருமாறு அழைத்தனர். சீன அறிவியல் அகாடமியும் ராணுவ அமைப்புக்களும் கூட அழைப்பு விடுத்தன. அவற்றை எல்லாம் ஒதுக்கி விட்டு சீனத் தொலைக்காட்சி சிசிதிவியில் தொலைக்காட்சி நிலையத்தின் அரங்க வடிவமைப்பாளர் பணியை ஏற்றிருக்கிறார். காரணம் தனது திறமையை முதலீடாகப் போட்டு பண் பண்ணும் வர்த்தக நோக்கும் கெட்டிக்காரத்தனமும் இல்லை. "சுதந்திரமான ஒரு விவசாயியாக இருந்தேன். இன்னும் அப்படியே இருக்க விரும்புகின்றேன்"என்கிறார். 1 2
|