46 வயதான பாஃன் சுன் கோ, பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துக்கொண்ட பிறகு, செய்திப்பணியில் ஈடுபட்டார். அவர் மிதி வண்டி மூலம் சீனாவின் மேற்குப்பகுதியைக் கடந்து சென்று, லாரி வண்டி மூலம், உயரமான திபெத் உறைபனி மலைக்குச் சென்றுள்ளார். 1998ம் ஆண்டில், சீனாவின் பார்வைக்குழுவுடன் தென் துருவத்தில் பயணம் செய்தது, அவருடைய மனத்தில் மறக்க முடியாத அனுபவம். அது பற்றி கூறியதாவது:
அந்த நிகழ்ச்சி மறக்க முடியாது. எங்களின் கப்பல், டேக்ரை நீரிணையைக் கடந்து சென்ற போது, கடல் அலை 20 மீட்டர் உயரம் எழும்பி கீழே நோக்கி வீழ்ந்தது. இதைக் கண்கூடாக பார்த்த பிறகு, பண்டைக்காலத்தில் சாங் ஹொவின் கப்பல் குழு, கடலில் சந்தித்த இன்னல்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை, நான் உணர்ந்தேன். சாங் ஹொ மற்றும் அவருடைய உறுப்பினர்கள் மீது நான் கொண்ட மதிப்பு உயர்ந்தது என்றார் அவர்.
பாஃன் சுன் கோ, வூ ஹான் நகரின் வூ ஹான் நாளேட்டின் செய்தியாளர். சீனாவின் நடுப்பகுதியிலுள்ள வூ ஹான் நகர், யாங்சி ஆற்று நடுப்பகுதியின் கப்பல் போக்குவரத்து மையமாகும். முன்பு, கடல் பயணம் பற்றி அறிவிக்க, அவர் விரும்பினார்.
பல்வேறு நாடுகளில் பேட்டி காணும் போது, வாழ்க்கை சூழல் மாறியதால், பாஃன் சுன் கோ பல முறை ஹோட்டலில் நோய் வாய்ப்பட்டார். ஆனால் அவர் வேலை ஒரு போதும் தடைப்பட வில்லை. ஒரு செய்தியாளராக, சிக்கலான நிலைமையும், மோசமான சூழலும் இருந்த போதிலும், கடமைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:
செங் ஹொவுக்கான நினைவு நீண்டகாலமாக இருக்க வேண்டும் என விரும்பினேன். ஒவ்வொரு சீனரும், இந்த வரலாற்றை நினைத்துப் பார்த்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.
1 2
|