தூரமான இடத்துக்கு சென்று பேட்டி காண்பது, தனது வாழ்க்கை வடிவமாக மாறியுள்ளது. இதில், பெற்றோரின் செல்வாக்கு உள்ளது. பாஃன் சுன் கோவின் பெற்றோர், ஓவியர் ஆவர். அவர்கள் அடிக்கடி வெளியே சென்று ஓவியம் தீட்டினர். குழந்தைக்காலத்தில், பெற்றோரின் இயற்கை காட்சி ஓவியத்தைப் பார்த்த பின்பு, அவர் மிகவும் எதிர்பார்த்தார். செய்தியாளராக வேலை செய்வது, தனது குழந்தைக்காலத்தின் விருப்பத்துக்கு மிகவும் பொருந்தியது. குறிப்பாக, தூரமான இடத்தில் பேட்டி காண்பது, இயற்கையுடன் மேலும் அதிகமாக தொடர்பு கொண்டு, பல்வேறு இடங்களின் பழக்கவழக்கங்களைப் புரிந்துகொள்ளலாம்.
ஆண் செய்தியாளரை விட, பெண் செய்தியாளருக்கு மேலும் அதிகமான மேம்பாடு உண்டு என்று அவர் கருதினார்.
அவர் மேலும் கூறியதாவது:
ஆண்களை விட, பெண் செய்தியாளர்கள் நுண் உணர்வைக் கொள்வதோடு, மேலும் விவரமாக பார்வையிடுகின்றனர். ஆண்கள் பேட்டி காணும் போது, போட்டியாற்றலையும் தாக்குதல் ஆற்றலையும் கொள்வதாக, பலர் கருதுகின்றனர். ஆனால், பெண் செய்தியாளர் பாதுகாக்கப்பட வேண்டுமென கருதப்படுகிறது என்றார் அவர்.
தமது முயற்சிகள் மூலம், பாஃன் சுன் கோ பல பரிசுகளைப் பெற்றுள்ளார். அவருடைய படைப்பு, சீனாவின் செய்தித்துறையில் அடிக்கடி பரிசுகளைப் பெற்றுள்ளன. அவர், சீனச் செய்தித்துறையின் மிக உயரிய பான் சாங் சியாங் என்ற விருதைப் பெற்றார். ஆனால் அவர் இதில் கவனத்தைச் செலுத்த வில்லை. எதிர்காலத்தில் அவர் தொடர்ந்து தூரமான இடங்களில் பேட்டி காண வேண்டும். மேலும் சிறப்பாக கட்டுரைகளை எழுத வேண்டும் என்று அவர் விரும்பினார். 1 2
|