• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-15 10:56:44    
கல்வியறிவினால் வளம் அடைந்துள்ள பி ஜெ பிரதேசம்

cri

சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள குவெய் சோ மாநிலத்தில் அமைந்துள்ள பி ஜெ பிரதேசம், வறுமையின் பிடியில் சிக்கிய மலைப் பிரதேசமாக இருந்தது. அப்போது, சுமார் 60 விழுக்காட்டு மக்கள் உணவு உடை பிரச்சினையினால் அல்லல்பட்டு வந்தனர். சுமார் 50 விழுக்காட்டு மக்கள் கல்வி அறிவு அற்றவர். இருப்பினும், 1988ஆம் ஆண்டில், மனித குலம் வசிப்பதற்கு தகுதியற்ற பிரதேசமாக இதை ஐ.நாவின் ஒரு அமைப்பு உறுதிப்படுத்திய பின், மனித குலத்தின் வாழ்விலும் வளர்ச்சியிலும் அங்குள்ள மக்கள் அற்புதம் படைத்தனர். இந்த பிரதேசத்தின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி, முழு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தாண்டியுள்ளது. ஏழை மக்களின் எண்ணிக்கை 40 லட்சத்திலிருந்து 6 லட்சமாக குறைந்துள்ளது.

மக்கள் வறுமை, வளமற்ற மண், மோசமான சுற்றுச்சூழல் ஆகியவை, பி ஜெ பிரதேசத்தின் உண்மையான காட்சியாக இருந்தது. ஆனால், 1988ஆம் ஆண்டுக்குப் பிறகு அது மாற்றம் பெற்றது. குவெய் சோ மாநிலத்தின் அப்போதைய கட்சி கமிட்டி செயலாளர் ஹு சிந்தாவ், "வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் உயிரின பாதுகாப்பு சோதனை மண்டலத்தை" உருவாக்கும் யோசனையை முன்வைத்தார். இந்த யோசனை மத்திய அரசின் ஆதரவை பெற்றது. அவ்வாண்டில், சோதனை மண்டலம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. அங்குள்ள மோசமான வாழ்க்கை நிலையை மாற்ற, வறுமை ஒழிப்பு, உயிரின பாதுகாப்பு, மக்கள் தொகை கட்டுப்பாடு ஆகிய 3 அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

1988ஆம் ஆண்டில்தான், 8 ஜனநாயக கட்சிகளின் மத்திய கமிட்டிகளையும் சீன தேசிய தொழில் மற்றும் வணிக சம்மேளனத்தையும் மையமாக கொண்ட, "கல்வியறிவினால் ஒதுக்குப்புறமான பிரதேசத்துக்கு உதவி வழங்கும் நிபுணர் குழு" நிறுவப்பட்டது. பி ஜெ பிரதேசத்தில் கல்வி அறிவு மூலம் வறுமையை ஒழிக்கும் முயற்சி துவங்கியது. இந்த குழுவில், நிலக்கரி, மின்னாற்றல், வேதியியல் தொழில், உழவுத் தொழில் முதலிய துறைகளின் நிபுணர்கள் இடம்பெற்றனர். "வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் உயிரினப் பாதுகாப்பு சோதனை மண்டலத்தை" வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் பி ஜெ பிரதேசத்துக்கு உதவிடுவது, பி ஜெ பிரதேசத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு இணங்க யோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைப்பது, வெளிப்புற ஆதரவை நாட பி ஜெ பிரதேசத்துக்கு உதவி வழங்குவது, முக்கிய திட்டப்பணியை ஆராய்ந்து வறுமை ஒழிப்பு பணியின் பயனை உயர்ப்பது ஆகியவை இந்த குழுவின் முக்கிய கடமையாகும்.

தற்போது, 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. அங்குள்ள விவசாயிகளின் வருமானம் சுமார் 10 மடங்குகள் அதிகரித்துள்ளது. வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு பணியின் பூர்வாங்க குறிக்கோள் நிறைவேறியுள்ளது. சீனாவின் புகழ்பெற்ற பொருளியலாளரும், பி ஜெ சோதனை மண்டலத்தின் நிபுணர் குழுவின் தலைவருமான லி யி நிங் கூறியதாவது—

"உள்ளூர் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது எப்போதுமே நாங்கள் கவனிக்கும் பிரச்சினையாகும். ஒரு ஜனநாயக கட்சிக்கு ஒரு துறைக்கு பொறுப்பேற்று, பயிரிடுவது, பாசனக் கால்வாய் வெட்டுவது, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் உதவி வழங்குகிறது. விவசாயிகளின் வாழ்க்கை நிலையை தொடர்ந்து உயர்த்துவது இசைவான சமூகத்தின் முக்கிய அம்சமாகும். ஏழை பிரதேசத்தில் வறுமை ஒழிப்பு பணியும், உயிரினப் பாதுகாப்பு பணியும் எப்படி செவ்வனே செய்ய வேண்டும் என்பதை, பி ஜெ சோதனை மண்டலத்திலிருந்து நாங்கள் கண்டு கொள்ளலாம்" என்றார் அவர்.

1  2