கடந்த இரண்டு ஆண்டுகளில், அங்குள்ள விவசாயிகள் இன்பமாக வாழத் துவங்கினர். எடுத்துக்காட்டாக, வறுமை ஒழிப்பு திட்டப்பணியைச் சார்ந்து, தரமிக்க பசுக்களை வளர்ப்பதன் மூலம் சோ குவாங் பெய் குடும்பத்திற்குக் கிடைக்கும் வருமானம் ஆண்டுதோறும் குறைந்தது 2000 யுவானாகும். அறிவியல் தொழில் நுட்ப வழிமுறையில் அவரது குடும்பம் பயிரிட்ட சோளம், உருளைக்கிழங்கு முதலியவற்றின் ஆண்டு விளைச்சல் 3000 கிலோகிராமாகும். மேலும், அவரது மகன் மற்றும் மருமகள் வெளியூரில் வேலை செய்வது மூலம் கிடைக்கும் பணம் சேர்ந்து, அவரது குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் 10 ஆயிரம் யுவானைத் தாண்டியுள்ளது.
இதர இடங்களில் இந்த மாற்றம் குறிப்பிடத்தக்கதாக இல்லை. ஆனால், கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மிக குளிரான மலைப் பிரதேசத்துக்கு இது முன் கண்டிராத நிகழ்ச்சியாகும்.
தற்போது, இங்கு சாலை, நீர், மின்சார வசதிகள் கிடைக்கின்றன. சிறப்பு துறை தொழில் நுட்ப பணியாளர்கள் இங்கு வந்து, அறிவியல் முறையில் பயிரிடுவது, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை உள்ளூர் மக்களுக்கு கற்றுக் கொடுக்கின்றனர். இங்குள்ள இளைஞர்கள் வெளியூர்களிலிருந்து பணத்தையும் தொழில் நுட்பங்களையும் கொண்டு வருகின்றனர். இந்த வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சி திட்டத்தினால், ஆயிரக்கணக்கான விவசாயி குடும்பங்கள் உண்மையில் பயன் பெற்றுள்ளன.
பி ஜெ பிரதேசத்தில் நடைபெற்ற வறுமை ஒழிப்பு பணியின் வெற்றி, சீனாவின் பல்வேறு ஜனநாயக கட்சிகள் அரசு விவகாரங்களை விவாதித்து அதில் பங்கெடுத்து, ஜனநாயக கண்காணிப்பை வெளிக்கொணர்ந்து, ஜனநாயக வளர்ச்சியை நடைமுறைப்படுத்துவதை பிரதிபலிக்கிறது என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டி உறுப்பினர் ஜௌ பிங் கருதுகிறார். அவர் கூறியதாவது—
"பி ஜெ பிரதேசத்தில் வறுமையை ஒழிப்பதை அரசு விவகாரங்களை விவாதித்து அதில் பங்கெடுப்பதுடன் நாங்கள் இணைக்கிறோம். இந்த வறுமை ஒழிப்பு பணியை செயல்படுத்துவதன் மூலம் நாட்டின் நவீன மயமாக்கத்தில் நிலவும் பிரச்சினைகளை கண்டறிந்து, கருத்துருகளை உருவாக்கி, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விரைவுபடுத்தினால், அரசு விவகாரங்களில் பங்கெடுக்கும் கட்சிகளின் திறன் பிரதிபலிக்கும்" என்றார் அவர்.
பல்வேறு ஜனநாயக கட்சிகள் ஏற்பாடு செய்யும் வேளாண் தொழில் நுட்ப பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதன் மூலம் சந்தைக்கு ஏற்ற திறனை பரந்துபட்ட விவசாயிகள் வலுப்படுத்தியுள்ளனர். சீன தேசிய மக்கள் பேரவை பிரதிநிதியும் குவெய் சோ மாநிலத்தின் பி ஜெ பிரதேசத்தின் நிர்வாக அலுவலகத்தின் துணை கமிஷனருமான கு ஜு கூறியதாவது—
"கடந்த 17 ஆண்டுகளில், பல்வேறு ஜனநாயக கட்சிகளின் மத்திய கமிட்டிகளும் சீனத் தேசிய தொழில் மற்றும் வணிக சம்மேளனமும் அயராத உழைப்பின் மூலம், இசைவான சமூகத்தின் மீதான அவற்றின் எதிர்பார்ப்பை கோடிட்டுக் காட்டுகின்றன. அவற்றின் உதவியும் ஆதரவும், பி ஜெ பிரசேதத்திலுள்ள திட்டப்பணிகள் துவங்குவதற்கும் முன்னேற்றம் அடைவதற்கும் துணை புரியும். வளம் அடைந்து வரும் பி ஜெ பிரதேசத்தின் 70 லட்சம் மக்கள் இதனால் ஊக்குவிக்கப்படுகின்றனர்" என்றார் அவர். 1 2
|