• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-16 16:14:50    
நடுத்தல மற்றும் துவக்க பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி

cri
கல்வியின் தரத்தை குறிப்பாக அடிப்படைக் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் சீன கல்வி அமைச்சகம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி தரும் திட்டத்தை வலுப்படுத்தியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முளை பள்ளிகளில் வேலை செய்யும் நடுத்தர மற்றும் துவக்க பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்றைய நிகழ்ச்சியில் ராஜாராமும் கலையரசியும் இது பற்றி உங்களுக்கு விளக்குன்றனர்—ஓரு உரையாடல் மூலமாக.

ராஜாராம்... இன்றைய சமூகம் விரைவாக வளர்ந்து வருவதால் புதிதுதுத்தகாத் தகவல்களும், அறிவும் வளர்ந்து கொண்டே வருகின்ற நிலைமையில் மனித குல ஆன்மாவின் பொறியாளர் என்று அழைக்கப்படும் ஆசிரியர்களுக்கு மேலும் கூடுதலான பொறுப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பல நாடுகளில் ஆசிரியர்களுக்குப் பயிற்சிதரும் துறையில் மேன்மேலும் கவனம் செலுத்தப்படுகின்றன. சீன கல்வி அமைச்சகம் இத்துறையில் ஏதாவது திட்டம் வைத்திருக்கிறதா?

கலையரசி....கண்டிப்பாக. தங்கள் கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன் எங்கள் கல்வி அமைச்சகத்தின் அதிகாரி தான் சின் வெய் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது பற்றி கூறுவதைக் கேளுங்கள்.

கடந்த சில ஆண்டுகளாக கல்வியின் நிலையையும் தரத்தையும் உயர்த்துவதற்கு ஆசிரியர்களின் மூலம் பாடுபட வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு தொடர்சியாகப் பயிற்சிதரும் கல்வி வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துகிறது.

ராஜா உங்கள் கேள்வியைப் பார்ப்போம். நடைமுறையில் சீனாவில் நடுத்தர மற்றும் துவக்க பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மறுபயிற்சி தரும் அமைப்பு முறை நிறுவப்பட்டுள்ளது. இது பற்றிய கல்விச் சட்டங்கள் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களின் கடமையும் உரிமையும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து நடுத்தர மற்றும் துவக்க பள்ளி ஆசிரியர்கள் குறைந்தது 240 மணி நேரமாவது மறுபயிற்சி பெற வேண்டும் என்று சட்டங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜாராம்...இந்த பயிற்சியின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?இது பற்றி விளக்கிக் கூறலாமா?

1  2