• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-16 16:14:50    
நடுத்தல மற்றும் துவக்க பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி

cri

கலையரசி...மகிழ்ச்சியுடன் விளக்கி கூறுகின்றேன். முதலில் கல்வி கற்பிக்கும் பணியை ஏற்று விரும்பி செவ்வனே செய்ய வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு ஊக்கம் தருவது. இரண்டு, சிறப்புத் தொழில் தரத்தை உயர்த்தும் வகையில் ஆசிரியர்களுக்கு இத்துறை பற்றிய பயிற்சி அளிப்பது. மூன்றாவது கற்பிக்கும் திறனையும் வழிமுறைகளையும் உயர்த்தும் வகையில் ஆசிரியர்களுக்கு வகுப்பு நடத்துவது. இந்த மூன்று வழி முறைகள் பயிற்சியின் முக்கிய அம்சங்களாகும்.

ராஜாராம்....எனக்கு புரிந்தது. இப்போது சீனாவில் ஒரு கோடிக்கு மேலான நடுத்தர மற்றும் துவக்க பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கான பயிற்சி பணி முக்கியமாக 6 ஆசிரியர் பல்கலைக்கழகங்களின் ஏற்பாட்டில் நடைபெறுகின்றது என்று கேள்விப்பட்டேன். அதற்கு தேவைப்படும் கட்டணத்தை பல்வேறு நிலை அரசுகள் செலுத்துவதாகச் சொல்கின்றார். அப்படிதானா?

கலையரசி..... ஆமாம். கட்டணம் சேலுத்தும் பொறுப்பை பல்வேறு நிலை அரசுகளால் ஏற்கின்றன. தவிர, பயிற்சி தரும் போது வழக்கமாக நேருக்கு நேராக உம்காரவைத்து கற்பிக்கும் அதேவேளையில் வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணைய தொடரமைப்பு ஆகியவற்றின் மூலமும் மறைமுகப் பயிற்சி அளிக்கப்படுகின்றது.

ராஜாராம்.....பெய்சிங் புறநகரில் மீயூன் மாவட்டம் ஒரு வேளாண் மாவட்டமாகும். அங்கே 90 நடுத்தர மற்றும் துவக்க பள்ளிகள் உள்ளன. 4000 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லி தருகின்றனர். மலை பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் போக்குவரத்து வசதிகள் குறைவு. அங்கு கல்வி தரம் எப்படி உயர்த்தப்படுகின்றது? சூழ்நிலையை மாற்ற உள்ளூர் கல்வி வட்டாரம் கடந்த சில ஆண்டுகளில் என்ன வேலை செய்துள்ளது?

கலையரசி.....தங்கள் கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன் மாவட்ட பயிற்சி மையத்தின் பொறுப்பாளர் மா வென் சோ கூறுவதைக் கேளுங்கள்

கிராம கட்டாயக் கல்வியின் தரத்தை உயர்த்தும் போக்கில் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவது முக்கிய திறவுகோலாகும். ஆகவே நகர மற்றும் மாவட்ட கல்விப் பணியகங்கள் ஆசிரியர்களுக்கான பயிற்சியில் மிக கவனம் செலுத்துகின்றன.

ராஜா, இந்த அதிகாரி கூறியதை உறுதிப்படுத்தும் வகையில் முச்சியூ நடுத்தர பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்கும் பணியில் 20 ஆண்டுகளாக வேலை செய்துள்ள ஆசிரியர் ஹான் சன் ஹொ பற்றி கூறலாம். நடுத்த வயதான அவருக்கு கற்பிக்கும் அனுபவம் நிறையவே உண்டு. அவரை பொறுத்தவரை நடப்பு கல்வி திட்டத்தால் ஆசிரியர்களுக்கு அதிகப் பொறுப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பயின்று சொந்த தரத்தை உயர்த்தினால் தான் கற்பிக்கும் பணியில் தேர்ச்சி பெற முடியும் என்பது அவருடைய கருத்து தான். அதேவேளையில் பயிற்சி மூலமும் ஆங்கில அறிவின் தரத்தை மேலும் உயர்த்தி மேலும் கூடுதலான நவீனப் பாடமுறைகளை கற்றுக் கொள்ள அவர் ஆசைப்படுகின்றார்.

ராஜாராம்...நீங்கள் சொன்னது சரிதான். தவிரவும், ஆசிரியர் ஹான் பயிற்சி வகுப்பில் பயன்படுத்திய பாடநூல் அமெரிக்காவில் வெளியிடப்பட்டதாகும். அவர் முக்கியமாக இணையதளத்தின் மூலம் கல்விப் பயிற்சி பெறுகிறார். நாள்தோறும் வகுப்புக்கு முடிந்தபிறகு இல்லத்தில் இணையத் தொடரமைப்பு மூலம் பயிற்சி பெறுகின்றார். 2 வாரங்களுக்கு ஒரு முறை மாவட்டத்தில் வாழ்கின்ற அயல்நாட்டு ஆசிரியரிடமும் கற்கிறார். பயிற்சி கடினமாக இருந்த போதிலும் மாணவர்களின் ஆங்கில மதிப்பெண் உயர்வது அவருக்கு ஆறுதலாக உள்ளது என்று கேள்விப்பட்டேன்.

கலையரசி....இது மட்டுமல்ல ஆசிரியர் ஹான் போன்று மீயூன் மாவட்டத்தின் ஷிலீபூ மைய துவக்க பள்ளியில் பணி புரிகிற ஆசிரியை வான் ஹை லியான் அம்மையார் 7 வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் சொல்லி தருகின்றார். முன்பு அவர் கணிணி தொழிலில் ஈடுபட்டார். ஆங்கில மொழி மீது மிகவும் ஆர்வம் கொண்டதால் ஆங்கில மொழி ஆசிரியராக தொழிலை மாற்றிக் கொண்டார். இப்போது வாரத்துக்கு ஒரு முறை 200 கிலோமீட்டர் தொலைவு சென்றுது பெய்சிங்கில் பயிற்சி வகுப்பில் ஒரு நாள் பயின்று வருகின்றார். வேலை செய்யும் அதேவேளையில் படிப்பது மிகவும் கடினம் ஆனால் இது மதிப்புக்குரியது என்று கருதுகின்றார். இது பற்றி அவருடைய கருத்தை கேளுங்கள்

"இந்த பயிற்சி மிகவும் தேவையானது. நாங்கள் கற்பிக்கும் தரம் உயர்வதற்கு மிகவும் துணை புரியும். பயிற்சி ஆங்கிலப் பேச்சு திறமை உயர்ந்தது".


1  2