• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-18 16:30:57    
தொங் இன ஊரில் சுற்றுலா

cri

நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, தொங் இன இளைஞர்களும் இளம் நங்கையரும் தமது கிராமத்தின் வாயிலில், விருந்தினரை வரவேற்கும் போது பாடிய டாடலாகும். குவெய்சோ, ஹுனான் மாநிலங்கள் குவாங்சி தன்னாட்சிப் பிரதேசம் ஆகியவற்றின் முச்சந்தியில் தொங் இன மக்கள் குழுமி வாழுகின்றனர்.

தொங் இனத்தவர், மல குரல் தழுவிய குழு பாடலில் தேர்ச்சி பெற்றுவிளங்குகின்றனர். பக்க இசையின்றி பல்வகை குரலில் இக்குழு பாடல் பாடப்படும். இத்தகைய பாடல் வடிவம், மேலை நாட்டு ிசை, சீனாவில் பரவத் துவங்குவதற்கு முன், சீனாவின் பல்வேறு தேசிய இனங்களில் மட்டுமே காணப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் பாடல் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள், மற்றவருக்கு சொல்லிக்கொடுப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள். குழந்தைகள், 6 வயதிலிருந்தே இவ்வாசிரியர்களிடமிருந்து பாடக் கற்றுக்கொள்கின்றனர். மக்களின் பழக்க வழக்கங்களிலும், பாட்டொலி இடம்பெற்றுள்ளது.

இசை என்பது தொங் இன மக்களின் பழக்க வழக்கங்களின் ஆத்மா என்று கூறலாம்.

இங்கு, லீபிங் மாவட்டத்தின் சாவ்சிங் வட்டமாகும். உள்ளூர் வாழ் மக்கள், புதியன சுவைத்தல் விழா என்னும் அமோக அறுவடையைதக் கொண்டாடும் நடவடிக்கையை நடத்திக்கமொண்டிருக்கின்றனர். உற்சாகத்தில் மிதக்கும் மக்கள், முரசு மாடி கட்டிடத்திற்கு அருகிலுள்ள சதுக்கத்தில் கையோடு கைகோர்த்து வட்டமாக இருந்து, ஒரே தாளாட்டுடன் ஒரே காலடியில் ஆடிய வண்ணம், கம்பீரமான, இனிகையான துயெ என்ற பாடலைச் சேர்ந்து பாடுகின்றனர்.

தொங் இனத்தின் முரசு மாடி கட்டிடமும் பாலமும் மிகவும் தநித்துவம் வாய்ந்தவை. முரசு மாடி கட்டிடம், தொங் இன கிராமத்து மையமாகும். பொது மக்கள் கூட்டமும் கிராமத்து தலைவர்களின் அலுவல் கூட்டமும் நடைபெறும் இடமாகும். கட்டிடத்தின் உச்சியில் ஒரு பெரும் முரசு வைக்கப்பட்டுள்ளதால், முரசு மாடி கட்டிடம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிராம் தலைவர், முக்கிய அறிவிப்பைக் கிராமவாசிகளுக்கு அறிவிக்க நேரிடும் போது, முரசு அடிப்பதன் மூலம் அனைவரும் இக்கட்டிடத்திந் கீழ் அணிதிரள்வர். இத்தகைய கட்டியம், மரத்தால் ஆனது. இது, மூன்று –ஐந்து மாடிகளுடையது. அல்லது 15,16 மாடிகளுடையது.மரப் பலகையால் கட்டப்பட்டுள்ள இம்மாடி கட்டிடங்களில் இருப்பு ஆணி ஏதும் பயன்படுத்தப்படலவில்லைய தொங் ிநத்தின் பாலங்கள், நீளமான தாழ்வார வடிவ பாலங்களாக அமைகின்றன. சில பாலங்களில் ஓய்வு அறைகளும் உள்ளன. இப்பாலங்களை காற்று மழை பாலம் என தொங் இனத்தவர் அழைக்கின்றனர். ஏனெனில்,அதிக மழை பெய்யும் தொங் இன ஊரில், இப்பாலங்கள், காற்று-மழையைத் தடுப்பதற்குப் பயன் உள்ளவையாகத் திகழ்கின்றன்.

1  2