SUWA HARUO என்பவர், ஜப்பான் பல்களைக்கழகம் ஒன்றில் இசை நாடக வரலாற்று துறை பேராசிரியர் ஆவார். அவரது பயணம் பற்றி குறிப்பிட்ட போது, அவர் மனநிறைவு அடைவதாகக் கூறினார்.
இப்பயணத்தில், நான் தொங் இனத்தின் கட்டிட இயலைக் கண்டேன். அவர்களின் உணவுப்பொருட்களைச் சுவை பார்த்தேன். அழகான ஆடைகளைக் கண்டுகளித்ததோடு, தமது தலைமுறையினரை வளரச் செய்யும் அவர்களின் சில வழிமுறைகளையும் அறிந்துகொண்டேன் என்றார் அவர்.
நவீனமயமாக்கத்தை நோக்கிச் செல்லும் போக்கில், தேசிய இனத்தின் தனிச்சிறப்பியல்பைப் பிரதிநிதிதத்துவப்படுத்தும் சில கலையைப் பல தேசிய இனங்கள் படிப்படியாக இழந்துவருகின்ரன. ஆனால், தொங் இனத்தின் ஆடல்பாடலில், தேசிய இனத் தன்மை, கலை சிறப்பியல்பு, ஆடல்பாடல் தன்மை ஆகிய மூன்றும் நன்றாக ஒன்றிணைந்துள்ளதைத் தாம் உணர்ந்துள்ளதாக, அவர் குறிப்பிட்டார். தேசிய இன தன்மை முழுமையானது என்பது, தம் மனதில் ஆழப் பதிந்துள்ளது என்றார் அவர்.
இனி, சுற்றுலா பற்றிய தகவலை வழங்குகின்றோம்.
கான்நாவில் சுற்றுலா
கான்சு மாநிலத்தின் தலைநகரான லான்சோ சென்றடைந்த பின்னர், கோச்சு வண்டி மூலம் கான்நா சென்றடையலாம். கான்நாவின்—நிலப்பரப்பளவு விசாலமானது. அது நீண்ட வரலாறுடையது. சியௌ குடும்பப் பண்பாடு, ஸ்வா பண்பாடு முதலியவற்றின் மரபுச் சிதிலங்கள் இங்கு காணப்படுகின்றன. உலகில் புகழ்பெற்ற லாப்லின் கோயில், அரசு நிலை இயற்கைப் பாதுகாப்புப் பிரதேசமான ச்சா கல் காடு, பறவைகள் புகலிடமான காஹெய் ஏரி, மாபெரும் புல் வெளி, இயற்கை காட்சி எழில் மிக்க லியெஹுவா மலை, லான்மு கோயில் எல்லாவற்றையும் கண்டுகளிக்கலாம். கான்நாவில் சுற்றுலா செல்ல அதிக செலவு ஆகாது. ஆனால் இயற்கைக் காட்சித் தலங்களும் பண்பாட்டு மரபுச்சிதிலங்களும் அதிகமாக இருப்பதால், அதிக நேரம் செலவழிக்க வேண்டி இருக்கும். கான்நாவில் நன்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டுமானால், குறைந்தது 2 வாரங்கள் தேவை.
ஆசியாவில் முதலிடம்
வானொலி மற்றும் தொலைக்காட்சிச் செலுத்தி, பொழுதுபோக்கு, சுற்றுலா ஆகியவற்றைக் கொண்ட சாங்காய் கீழை முத்து வானொலி-தொலைக்காட்சிக் கோபுரத்தின் உயரம் 460 மீட்டராகும். இது, ஆசியாவில் முதலிடமும் உலகில் மூன்றாவது இடமும் பெற்றுள்ளது. 1 2
|